PulseNews
தொழில்நுட்பம்

Japanese 7 Seater: ரூ.17 லட்சத்தில் புதிய 7 சீட்டரை இறக்கும் ஜப்பான் கம்பெனி - ஃபேமிலிக்கு செட்டாகுமா? மைலேஜ் வருமா?

Japanese Nissan 7 Seater: ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டரின் அம்சங்கள் உள்ளிட்ட விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஜப்பான் கம்பெனியின் 7 சீட்டர்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் குடும்ப பயன்பாட்டிற்கான கார் மாடல்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதை ஈடு செய்யும் நோக்கில் பல்வேறு முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும், இந்த செக்மெண்டில் தங்களது பங்களிப்பை பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் உள்ளூரில் பிரபலமாக அறியப்படும் ஜப்பான் நிறுவனமான நிசானும் புதிய 7 சீட்டர் மாடலை உள்ளூரில் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது. இது ப்ராண்ட் சார்பில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட டெக்டான் எஸ்யுவியின் மேம்படுத்தப்பட்ட எடிஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப பயன்பாட்டிற்கான ஒரு எஸ்யுவியை தேடுவதாக இருந்தால், இதுகுறித்த தகவல்களை அறிவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நிசான் 7 சீட்டரின் வெளியீடு எப்போது?

ரெனால்ட் நிறுவனம் தனது 7 சீட்டர் போரியல் எஸ்யுவியை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதே பாணியில் பயணிக்க நிசான் நிறுவனமும் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான ப்ராண்ட் சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகாத நிலையிலும், புதிய மாடல்களை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த 7 சீட்டர் வாகனம் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த நிசான் ஏழு இருக்கைகள் கொண்ட வாகனம் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட விவரங்கள் எதுவும் இல்லை என்றாலும், ரெனால்ட் தனது புதிய போரியலை அறிமுகப்படுத்திய பிறகு, 2027-ஆம் ஆண்டின் மத்தியில் இது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிசான் 7 சீட்டரின் எதிர்பார்க்கப்படும் விலை

புதிய நிசான் குடும்ப எஸ்யுவி, அந்த நிறுவனத்தின் போட்டித்தன்மை வாய்ந்த விலை நிர்ணய உத்தியைப் பின்பற்றக்கூடும். அதன்படி இதன் விலை ரூ. 17 லட்சம் முதல் ரூ. 26 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை வாகனங்கள் கூட இன்னும் தென்படாததால், இந்த மாடலைப் பற்றிப் பேசுவது ஏதுவாக இருக்காது.

நிசான் 7 சீட்டரின் அம்சங்கள், வசதிகள்

நிசானின் புதிய ஏழு இருக்கைகள் கொண்ட வாகனம், ப்ராண்டின் முதன்மை மாடலான பேட்ரோல் எஸ்யுவியைப் போன்ற வடிவமைப்பு மொழியைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள அம்சங்கள் சில கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மாடலிலும் தொடரக்கூடும். அதன்படி, இந்த மாடலில் 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், லெவல்-2 ADAS, 360-டிகிரி கேமரா, பவர் மற்றும் காற்றோட்ட வசதியுடன் கூடிய முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பிற அம்சங்கள் இடம்பெறலாம்.

இதையும் படியுங்கள்: Japanese Luxury Car: 25KM மைலேஜில் களமிறங்கிய ஜப்பானின் சொகுசு ஹைப்ரிட் கார் - விலை, அம்சங்கள், வசதிகள் எப்படி?

நிசான் 7 சீட்டரின் பவர் ட்ரெயின்

இன்ஜினைப் பொறுத்தவரை, டெக்டானில் இருந்து பெறப்பட்ட அதே 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த எஸ்யுவியில், சர்வதேச சந்தையில் நிசான் காஷ்காய்க்கு ஏற்கனவே சக்தியளிக்கும், கிட்டத்தட்ட லிட்டருக்கு 36 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் 1.5-லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் இடம்பெறும் என்றும் துறைசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த ப்ராண்ட் உறுதியான விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், அதன் வெளியீட்டுத் தேதி நெருங்கும் போது கூடுதல் விவரங்கள் வெளியாகக் கூடும்.

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Japanese 7 Seater: ரூ.17 லட்சத்தில் புதிய 7 சீட்டரை இறக்கும் ஜப்பான் கம்பெனி - ஃபேமிலிக்கு செட்டாகுமா? மைலேஜ் வருமா?
PulseNews சுருக்கம்

ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம், இந்திய சந்தையில் குடும்பங்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய 7 சீட்டர் ரக காரை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் வரவிருக்கும் இந்த கார் குறித்த முக்கிய அம்சங்கள் மற்றும் விவரங்களை இந்தத் தொகுப்பில் விரிவாகக் காணலாம்.

தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் குடும்ப பயன்பாட்டிற்கான கார்களுக்கு அதிக வரவேற்பு நிலவுகிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த பிரிவில் தங்களது பங்களிப்பை அதிகரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology