PulseNews
தொழில்நுட்பம்

முதலமைச்சர் விஜய்யின் பெயரில் வடமாநிலங்களில் சைபர் மோசடி.

வடமாநிலங்களில் முதலமைச்சர் விஜய் பெயரில் மர்ம கும்பல் சைபர் மோசடியில் ஈடுபட்டு வரும் நிலையில், மும்பையில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்றப் பொறுப்பாளரிடமே விஜய் பேசுவதாக வாட்சப் ஆடியோ அனுப்பி பணம் பறிக்க முயன்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூரைச் சேர்ந்த மொஹரம் அலி என்ற அந்த இளைஞரின் வாட்சப் எண்ணுக்கு US Bank என்ற பெயரில் 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையின் புகைப்படம் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து வந்த ஒரு குரல் பதிவில் தாம் தளபதி விஜய் பேசுவதாகவும் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். தனது அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு உதவி செய்ய காசோலையை அனுப்பியுள்ளதாகவும் அந்தத் தொகையைப் பெறுவதற்கு குறிப்பிட்ட எண்ணுக்கு வங்கி செயல்முறை கட்டணமாக 3 ஆயிரம் ரூபாய் அனுப்பினால் 4 லட்சம் ரூபாய் உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும் என்றும் கூறியுள்ளனர்.

Polimer News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
முதலமைச்சர் விஜய்யின் பெயரில் வடமாநிலங்களில் சைபர் மோசடி.
PulseNews சுருக்கம்

முதலமைச்சராக விஜய் இருப்பதாகக் கூறி வடமாநிலங்களில் மர்ம நபர்கள் சைபர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மும்பையில் வசிக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மொஹரம் அலியிடம் மர்ம நபர்கள் பணம் பறிக்க முயற்சித்துள்ளனர்.

அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு அமெரிக்க வங்கியின் நான்கு லட்சம் ரூபாய்க்கான காசோலை புகைப்படம் அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் பேசுவதாகக் கூறி ஆடியோ பதிவு ஒன்றையும் அனுப்பி மோசடியில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology