அருணாச்சலேஸ்வரர் கோயில் மொபைல் போன்களுக்கு தடை இன்று முதல் அமல்
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் முக்கிய திருக்கோயில்களில் இன்று முதல் செல்போன்கள் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் உள்ளிட்ட 52 முதுநிலைத் திருக்கோயில்களில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கோயில்களின் புனிதத் தன்மையையும் ஆன்மீகச் சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் மூலம் இறைவனின் திருவுருவங்களைப் புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு [...] The post அருணாச்சலேஸ்வரர் கோயில் மொபைல் போன்களுக்கு தடை இன்று முதல் அமல் appeared first on TamilMani.News .

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 52 முக்கிய முதுநிலைத் திருக்கோயில்களில், இன்று முதல் செல்போன் பயன்படுத்த முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.
கோயில்களின் புனிதத்தையும், அங்குள்ள ஆன்மீகச் சூழலையும் பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பக்தர்களும் பணியாளர்களும் கோயில் வளாகத்திற்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.