PulseNews
தொழில்நுட்பம்

ஒரே சார்ஜில் 180 கி.மீட்டர் மைலேஜ்.. நாளை அறிமுகமாகிறது Simple Wave இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் இ ஸ்கூட்டர் நிறுவனங்களில் ஒன்று Simple Energy. நாட்டிலே அதிக மைலேஜ் அளிக்கும் இ ஸ்கூட்டர் தயாரித்துள்ள நிறுவனம் என்ற பெருமைக்குச் சொந்தமானது இந்த Simple Energy நிறுவனம்.

Simple Wave நாளை அறிமுகம்:

இவர்கள் இந்திய சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள நிறுவனம் Simple Wave. இவர்களின் இந்த புதிய இ ஸ்கூட்டர் அறிமுகமாகும் என்று கூறியது முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த Simple Wave இ ஸ்கூட்டர் நாளை இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.

விலை எவ்ளோ?

இதன் விலை ரூபாய் 1.30 லட்சம் முதல் ரூபாய் 1.50 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த புதிய Simple Wave இ ஸ்கூட்டரில் ட்வின் ஷாக் அப்சார்பர் வசதி உள்ளது. சிம்பிள் ஒன் இ ஸ்கூட்டரில் மோனோஷாக் இருந்தது. அதற்கு பதிலாக தற்போது ட்வின்ஷாக் அபசார்பர் பயன்படுத்தப்படுகிறது. டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே வசதி உள்ளது.

எதிர்பார்ப்புகள்:

இதில் அதிகபட்மாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம் என்று கூறப்படுகிறது. நாளை அறிமுகமாக உள்ள இந்த Simple Wave இ ஸ்கூட்டர் பற்றி மற்ற தகவல்கள் ஏதும் பெரியளவில் வெளியாகவில்லை. இந்த இ ஸ்கூட்டர் இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவில் வி்ற்பனையாகும் என்று சிம்பிள் எனர்ஜி நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இந்த இ ஸ்கூட்டர் ஏதர் ரிஸ்டா, டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய இ ஸ்கூட்டர்களுக்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என்று சிம்பிள் எனர்ஜி நிறுவனம் எதிர்பார்க்கிறது. அலாய் சக்கரங்கள், டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி டூயல் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் இந்த இ ஸ்கூட்டர் மட்டுமின்றி விரைவில் சிம்பிள் எனர்ஜி அர்ரைவ் இ ஸ்கூட்டரும் அறிமுகமாக உள்ளது.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஒரே சார்ஜில் 180 கி.மீட்டர் மைலேஜ்.. நாளை அறிமுகமாகிறது Simple Wave இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
PulseNews சுருக்கம்

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது புதிய 'சிம்பிள் வேவ்' (Simple Wave) இ-ஸ்கூட்டரை நாளை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. அதிக மைலேஜ் தரும் இ-ஸ்கூட்டர்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற இந்நிறுவனம், இந்த புதிய மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வசதியுடன் வருவதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய ஸ்கூட்டரின் விலை குறித்த எதிர்பார்ப்புகள் சந்தையில் எழுந்துள்ளன. அறிமுகம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த தயாரிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology