வேலூர்: இலவச முகாம்... இன்ஸ்டா விளம்பரம்... பெண்ணின் உயிரைப் பறித்ததா `அபூர்வ மூலிகைச் சாறு’?
`அபூர்வமான பச்சிலை மூலிகைச் சாறு’ என்று இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவில் சொன்னதை நம்பி, தனிநபர்களால் நடத்தப்பட்ட இலவச முகாமிற்குச் சென்று கண்களில் விட்டுக்கொண்ட பெண் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். | free camp - instagram ad - rare herbal extract claims the life of a woman from pernambut

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ விளம்பரத்தைப் பார்த்து, இலவச மருத்துவ முகாமுக்குச் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். `அபூர்வமான பச்சிலை மூலிகைச் சாறு’ என்று விளம்பரப்படுத்தப்பட்ட அந்த மருந்தை, கண்களில் ஊற்றிக்கொண்டதால் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனிநபர்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த முகாமில் கலந்துகொண்ட பெண்ணின் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் இதுபோன்ற ஆபத்தான சிகிச்சைகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.