PulseNews
லைஃப் ஸ்டைல்

யுனெஸ்கோ டாப் பட்டியல்: குண்டு போட்டா எங்களுக்கு என்ன? கெத்து காட்டும் ஈரான்; துவம்சம் செய்த இந்தியா

உலகின் மிகச்சிறந்த வரலாற்றுச் சின்னங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் இயற்கை அமைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் தளங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இடங்களைக் கொண்ட முதன்மை நாடுகளின் பட்டியல் குறித்து பார்க்கலாம். 5 ஸ்டார் இல்ல; 7 ஸ்டார் ரயில் தெரியுமா? புல்லட் ரயிலே தோத்துடும்; ஜப்பானின் ரோலிங் பேலஸ் இத்தாலி (61 இடங்கள்) உலகிலேயே அதிகபட்சமாக 61 யுனெஸ்கோ பாரம்பரியக் தளங்களுடன் இத்தாலி முதலிடத்தைப் பிடித்து கெத்து காட்டுகிறது. ரோமின் வரலாற்று மையம், வெனிஸ் நகரம், பாம்பீ மற்றும் டொலோமைட்ஸ் மலைத்தொடர் ஆகியவை இதில் அடங்கும். பண்டைய ரோமானிய, மறுமலர்ச்சி மற்றும் இடைக்காலக் கலாச்சாரத்தின் மையமாக இத்தாலி திகழ்கிறது. சீனா (60 இடங்கள்) 60 இடங்களுடன் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. சீனாவின் பெருஞ்சவர், தடைசெய்யப்பட்ட நகரம், ஹுவாங்ஷான் மலை மற்றும் சிச்சுவான் பாண்டா சரணாலயங்கள் ஆகியவை சீனாவின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு மற்றும் பேரரசு கட்டிடக்கலையைப் பறைசாற்றுகின்றன. ஜெர்மனி (55 இடங்கள்) 55 பாரம்பரிய தளங்களுடன் ஜெர்மனி மூன்றாம் இடத்தை வகிக்கிறது. கொலோன் கதீட்ரல், பௌஹாஸ் மையங்கள், அப்பர் மிடில் ரைன் பள்ளத்தாக்கு மற்றும் வாடன் கடல் போன்றவை ஜெர்மனியின் கட்டிடக்கலை மற்றும் தொழில்முறை பரிணாமத்தைக் காட்டுகின்றன. பிரான்ஸ் (54 இடங்கள்) 54 இடங்களைக் கொண்டுள்ள பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது. வெர்சாய்ஸ் அரண்மனை, மாண்ட்- செயிண்ட்- மிச்செல், லோயர் பள்ளத்தாக்கு மற்றும் பாரிஸின் செய்ன் நதிக்கரை ஆகியவை பிரான்ஸின் கலை மற்றும் வரலாற்றுச் சிறப்பைப் பிரதிபலிக்கின்றன. ஸ்பெயின் (50 இடங்கள்) 50 பாரம்பரியக் களங்களுடன் ஸ்பெயின் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அல்ஹம்ப்ரா அரண்மனை, அந்தோணி கவுடியின் நவீன கட்டிடக்கலை அற்புதங்கள், டோலிடோ மற்றும் சாண்டியாகோ டி காம்போஸ்டெலா ஆகியவை ஸ்பெயினின் புகழ்பெற்ற அடையாளங்களாகும். இந்தியா (44 இடங்கள்) உலக அளவில் 44 யுனெஸ்கோ பாரம்பரிய தளங்களுடன் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. தாஜ்மஹால், ஜெய்ப்பூர் நகரம், ஹம்பி, காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகியவை இதில் அடங்கும். இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம், கலை நயம், பல்லுயிர் பெருக்கம் மற்றும் பலநூற்றாண்டு கால வரலாற்றிற்கு இது சான்றாக உள்ளது. ஈரான் (30 இடங்கள்) 30 யுனெஸ்கோ இடங்களுடன் ஈரான் உலகின் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளது. கஸ்வின் மாகாணத்தில் உள்ள 'அலமுத் கோட்டை' (Alamut Castle) மற்றும் அதைச் சுற்றியுள்ள 6 இடைக்காலக் கோட்டைகளுக்குச் சமீபத்தில் யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டது. 11-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிசாரி இஸ்மாயிலிகளின் அரசியல் மற்றும் ராணுவ மையமாக இக்கோட்டைகள் திகழ்ந்துள்ளன.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
யுனெஸ்கோ டாப் பட்டியல்: குண்டு போட்டா எங்களுக்கு என்ன? கெத்து காட்டும் ஈரான்; துவம்சம் செய்த இந்தியா
PulseNews சுருக்கம்

யுனெஸ்கோ நிறுவனம் உலகின் வரலாற்றுச் சின்னங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் இயற்கை அமைப்புகளை உலகப் பாரம்பரியத் தளங்களாக அங்கீகரித்து வருகிறது. இந்த அங்கீகாரம் பெற்ற இடங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள நாடுகளின் பட்டியலை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் இத்தாலி 61 இடங்களுடன் முதலிடத்தைப் பிடித்து உலக அளவில் முன்னிலையில் உள்ளது. அதிகப்படியான யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற நாடுகளின் வரிசையில் இத்தாலி முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle