நேபாள சுரங்க விபத்து: 10 நாட்களுக்குப் பிறகு இருவர் உயிருடன் மீட்பு
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு உருவானது. இந்த இயற்கை பேரிடரால் திரிசூலி நீர்மின் திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாள…

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு உருவானது. இந்த இயற்கை பேரிடரால் திரிசூலி நீர்மின் திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். பல நாட்கள் தொடர் தேடுதல் வேட்டைக்கு பிறகு, இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சுரங்கத்திற்குள் சிக்கியிருந்தவர்களில் லூஹைட்டாவ் என்ற சீன ஊழியரும் ஒருவர். மீட்புப் பணிகள் நடந்தபோது, அவர் சுமார் 10 நாட்கள் குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காத மிகக் கடினமான சூழலில் சிக்கியிருந்தது தெரியவந்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கையில் நேபாள ராணுவத்தினருடன் இணைந்து தென் கொரியாவின் பேரிடர் மீட்புக் குழுவினரும் தீவிரமாகப் பணியாற்றி அவரை பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்து நேபாள-சீனா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த பனிப்பாறை சரிவால் ஏற்பட்டதாகும். நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்தவர்கள் அதிசயத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான மீட்புப் பணிகள் கடந்த ஒன்பது முதல் பத்து நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது.