கென்யாவில் இருந்து வெளியேற டாடா நிறுவனத்திற்கு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவு
கென்யாவில் செயல்பட்டு வரும் டாடா கெமிக்கல்ஸ் மகாடி நிறுவனம், தனது செயல்பாடுகளை உடனடியாக நிறுத்திவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கென்யாவில் செயல்பட்டு வரும் டாடா கெமிக்கல்ஸ் மகாடி நிறுவனம், தனது செயல்பாடுகளை உடனடியாக நிறுத்திவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறியது மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாதது ஆகிய காரணங்களை முன்வைத்தே இந்த நடவடிக்கையை அதிபர் எடுத்துள்ளார். கென்ய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் அந்நாட்டில் தற்பொழுது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
டாடா குழுமத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த விவகாரம் குறித்து கென்ய அரசு தரப்பிலோ அல்லது டாடா நிர்வாகம் தரப்பிலோ இதுவரை கூடுதல் தகவல்கள் எதையும் விரிவாக வெளியிடவில்லை.