PulseNews
தொழில்நுட்பம்

இன்னும் e-KYC முடிக்கலையா...? கவலை வேண்டாம்... கேஸ் சிலிண்டர் சரிபார்ப்புக்கு அவகாசம் நீட்டிப்பு...!

தமிழகம் முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கான உண்மை சரிபார்ப்பு பணிக்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், தற்போது மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களது உண்மை சரிபார்ப்பு பணியை வரும் 23-ந் தேதி வரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் கேஸ் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை வீட்டு பயன்பாட்டிற்காக 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த மானியத் திட்டத்தை முறையாக செயல்படுத்தும் வகையில், சிலிண்டர் பயனாளிகளின் விவரங்களை உறுதி செய்யும் உண்மை சரிபார்ப்பு பணி தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உண்மை சரிபார்ப்பு பணியை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் தற்போது வரும் 23-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை சரிபார்ப்பு பணியை மேற்கொள்ளாத சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள், நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விவரங்களை சரிபார்த்து முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Seithipunal16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இன்னும் e-KYC முடிக்கலையா...? கவலை வேண்டாம்... கேஸ் சிலிண்டர் சரிபார்ப்புக்கு அவகாசம் நீட்டிப்பு...!
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயனாளர்களுக்கான e-KYC சரிபார்ப்பு பணிக்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இன்றுடன் முடியவிருந்த நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளன.

இதன்படி, இந்தியன் ஆயில், பாரத் கேஸ் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வாடிக்கையாளர்கள் தங்களது சரிபார்ப்பு பணிகளை வரும் 23-ம் தேதி வரை மேற்கொள்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology