Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?

ஆஃப் ரோடு மற்றும் உறுதியான கட்டமைப்புக்கு பெயர் பெற்ற டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸர் வரிசையில், சிறிய மற்றும் விலை குறைந்த மாடலான லேண்ட் க்ரூஸர் FJ இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இது மாருதி சுஸுகியின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட கார் அல்ல; முற்றிலுமாக டொயோட்டாவின் சொந்த தயாரிப்பாகும். காரின் விலையை குறைவாக நிர்ணயிக்கும் நோக்கில், இதனை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

2025 ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த எஸ்யூவி, 2028-ம் ஆண்டு இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இந்திய வாடிக்கையாளர்களின் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வரவுள்ளது.

உள்நாட்டிலேயே உற்பத்தி

இந்தியாவிலேயே அதிக உள்ளூர் உதிரிபாகங்களுடன் இதை தயாரிக்க டொயோட்டா இலக்கு வைத்துள்ளது. ஆண்டுக்கு 89,000 கார்களை உற்பத்தி செய்து, அதில் சுமார் 40,000 கார்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியால் இறக்குமதி செலவு குறைந்து, விலையும் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக அமையும்.

விலை எப்படி?

இதன் அதிகாரப்பூர்வ விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், தோராயமாக ரூ.30 லட்சம் (சுமார் 300,000 அமெரிக்க டாலர்) என்ற விலையில் இது அறிமுகமாகலாம். இதனால் ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில், லேண்ட் க்ரூஸர் குடும்பத்திலேயே மிகவும் மலிவான எஸ்யூவியாக இது இருக்கும். இது ஆஃப் ரோடிங் கார்களான மஹிந்திரா ஸ்கார்பியோ N 4x4 மற்றும் ஃபோர்ஸ் கூர்கா ஆகியவற்றுக்கு நேரடி போட்டியாக அமையும்.

டொயோட்டாவின் IMV லேடர்-ஃபிரேம் பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்படும் இதில், 163 PS பவர் மற்றும் 246 Nm டார்க் திறனைத் தரும் 2.7 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதனுடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் கரடுமுரடான சாலைகளைச் சமாளிக்க 4 வீல் டிரைவ் (4WD) சிஸ்டம் இடம்பெறும்.

என்னென்ன அம்சங்கள்?

ஃபார்ச்சூனரை விட சிறிய அளவிலான இந்த கார் 4,574 மிமீ நீளம், 1,855 மிமீ அகலம், 1,960 மிமீ உயரம், 2,580 மிமீ வீல்பேஸ் மற்றும் 215 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கும். இது காம்பேக்ட் எஸ்யூவியாக இருந்தாலும் 4WD சிஸ்டம் மூலம் ஆஃப்-ரோடிங்கிற்கு வலிமையான தேர்வாக இருக்கும். இதன் பாக்ஸியான மற்றும் மஸ்குலர் வடிவமைப்பில் எல்இடி ஹெட்லைட்கள், டிஆர்எல்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்கொயர் வீல் ஆர்ச்சுகள், சைடு ஸ்டெப்கள் மற்றும் பக்கவாட்டில் திறக்கும் பின்பக்க கதவில் ஸ்பேர் வீல் ஆகியவை இதற்கு முரட்டுத்தனமான தோற்றத்தைத் தருகின்றன.

பெரிய 7 சீட்டர்களை விட ஆஃப்-ரோடு திறன் கொண்ட காரை தேடுபவர்களுக்கு இந்த 5 சீட்டர் எஸ்யூவி மிகவும் ஏற்றது. உட்புறத்தில் 12.5 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சன்ரூஃப் மற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற நவீன வசதிகள் இருக்கும்.

குறைந்த விலை, லேண்ட் க்ரூஸர் அடையாளம் மற்றும் 4WD சிஸ்டம் மூலம், ஃபார்ச்சூனருக்கு ஒரு சிறந்த மற்றும் மலிவான மாற்றாக இந்த கார் இந்திய சந்தையில் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஃப்-ரோடு பயணங்களுக்குப் புகழ்பெற்ற டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸர் வரிசையில், புதிய லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. இது மற்ற நிறுவனங்களின் கார்களை ரீ-பேட்ஜ் செய்தது அல்ல, மாறாக டொயோட்டாவின் சொந்த தயாரிப்பாகும்.
இந்தக் காரின் விலையைக் குறைப்பதற்காக, இதனை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மற்ற மாடல்களை விட அளவில் சிறியதாகவும் விலை குறைவாகவும் இந்த புதிய லேண்ட் க்ரூஸர் FJ இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.