நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு : அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
நேபாள நாட்டிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 103 பேர் கைலாஷ் யாத்திரைக்காக இரண்டு குழுக்களாகச் சென்றுள்ளனர். அதில் முதல் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 54 நபர்களும், புதுச்சேரியைச் சேர்ந்த 3 நபர்களும் என மொத்தம் 57 நபர்களும் இரண்டாவது குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 49 நபர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தின் காரணமாக தமிழர்கள் உட்பட பலர் காணாமல் போனதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனையடுத்து அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிடும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாகவும் தமிழக அரசு சார்பில்அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டன. மேலும், இப்பேரிடரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய அரசின் வெளியுறவுத்துறை, நேபாள நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம், புதுடெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பயண முகவர் நிறுவனங்களின் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (27.08.2026) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில், புதுதில்லி தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழுவினர் நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்திட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்திடவும், மேலும் தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையினைக் கண்டறிந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திடவும். தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். அதோடு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், க. தென்னரசு, ர. வினோத் மற்றும் அயலகத் தமிழர்நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநர். ரெ. சதீஸ் ஆகியோர் புதுடெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டு, மீட்புப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிட வேண்டும். நேபாளத்திலிருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகளை மருத்துவக் குழுவினர் மூலம் வழங்கிடவும். அவர்களைப் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கும் தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய்உத்தரவிட்டுள்ளார். இக்கூட்டத்தில், புதுடெல்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு அரசின் புதுதில்லி சிறப்புப் பிரதிநிதி கே. வெங்கட நாராயணா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கைலாஷ் யாத்திரைக்காக நேபாளம் சென்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 103 பேர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து சென்றுள்ளனர். இதில் முதல் குழுவில் 54 தமிழர்கள் மற்றும் 3 புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 57 பேரும், இரண்டாவது குழுவில் 49 தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் தமிழர்கள் உட்பட பலர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்பது தொடர்பாக, நேபாளத்தில் உள்ள தமிழர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்யுமாறு முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.