PulseNews
லைஃப் ஸ்டைல்

புதுச்சேரி காவல் துறைக்குக் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது!

குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது அங்கீகாரம் என்பது, இந்தியாவின் முப்படைகள், துணை ராணுவப் படைகள், மாநில காவல் துறைகளுக்கு அவற்றின் சிறப்பான நீண்டகால சேவை, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்தைப் பாராட்டி, நாட்டின் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் மிக உயரிய கவுரவமாகும். இத்தகைய சூழலில் தான் மார்ச் மாதம் இந்த விருதைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதுச்சேரி காவல் துறைக்கு அறிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி காவல் துறைக்குக் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருதிற்கானஅங்கீகாரம் வழங்கும் நிகழ்வு போரிமேடு காவல்துறை மைதானத்தில் இன்று (09.08.2026) நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது புதுச்சேரி காவல் துறையின் தலைவர் டிஜிபி ஸ்டாலின் சிங்கிடம், மத்திய அமைச்சர் அமித்ஷா வண்ணக் கொடி விருதிற்கான அங்கீகாரத்தை முறைப்படி அளித்தார். இந்த விழாவில் துணை நிலை ஆளுநர் கைலாஷநாதன், முதலமைச்சர் என். ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி காவல் துறையினர், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என எரளமானோர் பங்கேற்றனர். ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு வண்ணக் கொடி விருதுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பட்டியலில் புதுச்சேரி காவல் துறையும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Nakkheeran16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
புதுச்சேரி காவல் துறைக்குக் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது!
PulseNews சுருக்கம்

புதுச்சேரி காவல் துறையின் சிறப்பான சேவை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டி, குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா, இன்று (09.08.2026) போரிமேடு காவல்துறை மைதானத்தில் நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுச்சேரி டிஜிபி ஸ்டாலின் சிங்கிடம் இந்த உயரிய விருதிற்கான அங்கீகாரத்தை முறைப்படி வழங்கினார். இந்த நிகழ்வில் துணை நிலை ஆளுநர் கைலாஷநாதன், முதலமைச்சர் என். ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுவரை 13 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கௌரவமான விருது, தற்போது புதுச்சேரிக்கும் கிடைத்துள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle