2027 முதல் டோட்டல் க்ளோஸ்... கடைகளில் அலை மோதும் மக்கள் கூட்டம்; நாய் இறைச்சிக்கு இப்படி ஒரு மவுசா?
தென் கொரியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த நாய் இறைச்சி (Dog Meat) தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான கடைசி சீசன் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 2027 பிப்ரவரி மாதம் முதல் நாய் இறைச்சி விற்பனைக்கு நாடு தழுவிய முழுமையான தடை அமலுக்கு வரவுள்ளது. தென் கொரிய நாடாளுமன்றத்தில் கடந்த 2024 ஜனவரியில் இயற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தின்படி, உணவுக்காக நாய்களை வளர்ப்பது, வெட்டுவது, விநியோகம் செய்வது மற்றும் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் சிறை தண்டனை - 3 ஆண்டுகள் அவகாசம் நாய் இறைச்சித் தொழிலில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு மாற்று வாழ்வாதாரத்தைக் கண்டறிய 3 ஆண்டுகள் சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் முடிந்ததும் சட்டத்தை மீறுபவர்களுக்குச் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும். இச்சட்டத்தால் பாதிக்கப்படும் சுமார் 5,600 பண்ணையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு மறுவாழ்வு உதவிகளை அரசு வழங்கி வருகிறது. விலங்கு நல ஆர்வலரான முன்னாள் அதிபர் யூன் சாக் யோல் மற்றும் அவரது மனைவி கிம் கோங்-ஹீ ஆகியோரின் தீவிர முயற்சியால் இந்தத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. நாய் இறைச்சிக்குப் பதில் 'கருப்பு ஆட்டுக்கறி' தலைநகர் சியோல் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற 'மொரான் சந்தை' (Moran Market) ஒரு காலத்தில் நாய் இறைச்சி வர்த்தகத்தின் மையமாகத் திகழ்ந்தது. ஆனால், தற்போது அங்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பெரும்பாலான உணவகங்கள் தங்களது மெனுவில் இருந்து நாய் இறைச்சி சூப்பான 'போசின்டாங்' (Bosintang) ஐ நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 'கருப்பு ஆட்டுக்கறி' போன்ற மாற்று உணவுகளை விற்கத் தொடங்கியுள்ளனர். இளைய தலைமுறையின் மாற்றம் சட்டம் வருவதற்கு முன்பே 90%-க்கும் அதிகமான தென் கொரியர்கள் நாய் இறைச்சியை உண்பதில்லை என்றும், 80%-க்கும் அதிகமானோர் இந்தத் தடையை வரவேற்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செல்லப் பிராணிகள் வளர்ப்பு அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். இது ஒருபுறம் இருக்க நாய் இறைச்சி முழுமையாக தடை செய்யப்படுவதை முன்னிட்டு உணங்களில் நாய் இறைச்சியை கடைசியாக ஒரு முறை ருசிக்க கூட்டம் அலைமோதுவது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்த நாய் இறைச்சி தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான கடைசி பருவம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. உணவுக்காக நாய்களை வளர்ப்பது, வெட்டுவது மற்றும் விற்பனை செய்வதைத் தடை செய்யும் சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் கடந்த 2024 ஜனவரியில் நிறைவேற்றியது.
இந்தத் தடை வரும் 2027 பிப்ரவரி மாதம் முதல் நாடு முழுவதும் முழுமையாக அமலுக்கு வருகிறது. இந்தத் தடையால் நாய் இறைச்சி விற்பனை நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இச்சட்டத்தை மீறுபவர்களுக்குச் சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.