ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!

இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் நிறுவனம் மஹிந்திரா. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இந்தியாவில் மின்சார கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Mahindra BE 6 Sporteq :

மஹிந்திரா நிறுவனம் மின்சார கார் தயாரிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார காராக Mahindra BE 6 Sporteq இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கார் இன்று அறிமுகமானது.

எந்த வேரியண்ட் என்ன விலை?

மின்சார காரான 59 கிலோவாட் மற்றும் 79 கிலோவாட் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது. இதன் எந்தெந்த வேரியண்ட் எவ்வளவு விலை என்பதை கீழே காணலாம்.

இதன் ஆரம்ப விலை ரூபாய் 11.45 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் 26.95 லட்சம் ரூபாய் ஆகும்.

1. ONE - 59 கிலோவாட் - ரூபாய் 11.45 லட்சம்

2.ONE - 59 கிலோவாட் - ரூபாய் 19.45 லட்சம்

3. TWO - 59 கிலோவாட் - ரூபாய் 12.95 லட்சம்

4. TWO - 59 கிலோவாட் - ரூபாய் 20.95 லட்சம்

5. THREE - 59 கிலோவாட் - ரூபாய் 21.95 லட்சம்

6.THREE - 70 கிலோவாட் - ரூபாய் 22.95 லட்சம்

7. THREE+ - 70 கிலோவாட் - ரூபாய் 23.95 லட்சம்

8. THREE+ - 79 கிலோவாட் - ரூபாய் 24.95 லட்சம்

9. FOUR - 79 கிலோவாட் - ரூபாய் 26.95 லட்சம்

10. Launch Edition - 79 கிலோவாட் - ரூபாய் 24.46 லட்சம்

11. FE - 79 கிலோவாட் - ரூபாய் 24.45 லட்சம்

12. FE FOUR - 79 கிலோவாட் - ரூபாய் 26.95 லட்சம்

சிறப்புகள்:

இந்த கார் 12 வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.100 கிலோமீட்டர் வேகத்தை 6.4 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது. Custom Drive Mode, Drift Mode, Tribe Drive, Revive & Revive SOS மற்றும் Acceleration Boost ட்ரைவ் மோட்கள் உள்ளது.

மைலேஜ்:

இந்த காரின் 79 கிலோவாட் பேட்டரி 683 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 59 கிலோவாட் பேட்டரி கார் 556 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. பேட்டரி அஸ் எ சர்வீஸ் வசதியும் இந்த காரில் உள்ளது. பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளும் இந்த காரில் மற்ற கார்களை காட்டிலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் முதல் மற்றும் 3வது வேரியண்டில் பேட்டரி அஸ் எ சர்வீஸ் வசதி அளிக்கப்பட்டுள்ளது. கிலோமீட்டருக்கு ரூபாய் 3.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, மின்சார வாகன சந்தையில் தனது கவனத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'Mahindra BE 6 Sporteq' என்ற புதிய மின்சார கார் இன்று சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், இந்த புதிய கார் அறிமுகம் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரே சார்ஜில் 683 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடிய சிறப்பம்சத்துடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.