ரூ.4,700 மதிப்புள்ள ஜெமினி ஏ.ஐ இனி இலவசம்: மாணவர்களுக்கு கூகுள் தந்த அதிரடி பரிசு; நிபந்தனைகள் என்னென்ன?
உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் தங்களின் கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ள செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை நோக்கி அதிகளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய ஏஐ கருவிகள் அடங்கிய 'ஸ்டூடண்ட் ஹப்' மற்றும் தகுதியுள்ள மாணவர்களுக்கு 1 வருட இலவச கூகுள் ஏஐ (Google AI) திட்ட சந்தா வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே உள்ள இந்தியக் கல்லூரி மாணவர்கள் உட்பட பிற சர்வதேச மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான 'கூகுள் ஏ.ஐ ப்ளஸ்' சந்தா முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் மாதக் கட்டணம் ரூ.399 (ஆண்டுக்கு ரூ.4,788). இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ஜெமினி ஓம்னி (Gemini Omni), ஜெமினியில் 2 மடங்கு கூடுதல் பயன்பாட்டு வரம்பு, 400 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், ஜிமெயிலில் ஜெமினி வசதி, கூகுள் ஃப்ளோ (Google Flow) மற்றும் ஜெமினி நோட்புக் (Gemini Notebook) ஆகிய சேவைகள் கிடைக்கின்றன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க அமெரிக்க மாணவர்களுக்கு: அமெரிக்க மாணவர்களுக்கு மாதத்திற்கு $19.99 மதிப்பிலான 'Google AI Pro' சந்தா ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 4 மடங்கு கூடுதல் ஜெமினி பயன்பாட்டு வரம்பு, ஜெமினி ஸ்பார்க் (Gemini Spark), ஜிமெயில்/கூகுள் டாக்ஸ்-ல் ஜெமினி பயன்பாடு, கூகுள் ஹெல்த், 5 TB ஸ்டோரேஜ் ஆகியவை வழங்கப்படுகின்றன. கூகுள் ஏஐ ப்ரோ பண்டிலின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு யூடியூப் பிரீமியம் (YouTube Premium) சந்தாவில் 70% வரை கட்டணச் சலுகையும் வழங்கப்படுகிறது. ஜெமினியின் அனைத்து ஏஐ கருவிகளையும் சலுகைகளையும் மாணவர்கள் எளிதாகப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக 'ஸ்டூடண்ட் ஹப்' உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்களை ஒழுங்குபடுத்துவதுடன், ஸ்டடி நோட்புக் தொடங்குதல், ஃபிளாஷ்கார்டுகள் (Flashcards) உருவாக்குதல் மற்றும் பயிற்சித் தேர்வுகளை (Practice Quizzes) எழுதிப் பார்த்தல் போன்ற பல்வேறு வசதிகளைப் பெறலாம். மாணவர்கள் தங்களின் புரிதல் திறனுக்கு ஏற்ப பாடங்களை சுருக்கமாகவும் சுயமாகவும் வடிவமைத்துக்கொள்ளலாம். தங்களின் கற்றல் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், மாதிரித் தேர்வுகளுக்குத் தயாராகவும் இது உதவுகிறது. மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ப அட்டவணைகள், வரைபடங்கள் மற்றும் 3D உருவகப்படுத்துதல்களை (3D Simulations) ஜெமினி உருவாக்கித் தரும். இதன் மூலம் கடினமான பாடக் கருத்துக்களையும் எளிதில் காட்சி வடிவில் புரிந்துகொள்ள முடியும். மாணவர்கள் பயணம் செய்யும் போதோ அல்லது ஓய்வு நேரங்களிலோ ஜெமினியுடன் நேரடியாகப் பேசி சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். மேலும், கூகுள் டிரைவில் உள்ள தங்களது பாடக் குறிப்புகளின் அடிப்படையில் உரையாடிப் பாடங்களைப் படிக்கவும் முடியும்.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், கூகுள் நிறுவனம் கல்லூரி மாணவர்களுக்காக பிரத்யேகமாக 'ஸ்டூடண்ட் ஹப்' எனும் ஏஐ கருவிகள் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தகுதியுள்ள மாணவர்களுக்கு ரூ.4,700 மதிப்புள்ள கூகுள் ஏஐ திட்ட சந்தாவை ஓராண்டு காலத்திற்கு இலவசமாக வழங்கப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த சலுகை இந்திய மாணவர்கள் உட்பட அமெரிக்காவிற்கு வெளியே உள்ள சர்வதேச கல்லூரி மாணவர்களுக்கும் பொருந்தும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மாணவர்கள் ஆர்வம் காட்டி வரும் சூழலில், கூகுளின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்குப் பயனுள்ள பரிசாக அமைந்துள்ளது.