ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?

உலகம் முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இரு சக்கர வாகனங்களும், கார்களும் மின்சார வாகனங்களாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் தேவையை புரிந்து கொண்ட முன்னணி கார் நிறுவனங்களும் மின்சார கார்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளன.

BMW i5 LWB முன்பதிவு தொடக்கம்:

உலகின் புகழ்பெற்ற கார் நிறுவனம் பிஎம்டபுள்யூ. இவர்கள் BMW i5 LWB என்ற மின்சார காரைத் தயாரித்துள்ளனர். இந்த காருக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஎம்டபுள்யூ-வின் டாப்கிளாஸ் தரத்திற்கு ஏற்ப இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த காரில் 81.6 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸ்ளூசிவ் ஃபர்ஸ்ட் எடிஷனாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த காரில் 99 கார்கள் மட்டுமே தற்போது விற்பனைக்கு வருகிறது. செடான் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 699 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த கார் 268 எச்பி குதிரைத் திறன் கொண்டது. 100 கிலோமீட்டர் வேகத்தை 6.7 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது.

சிறப்புகள்:

2,156 மி.மீட்டர் நீளமும், 1520 மி.மீட்டர் உயரமும் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 5 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம். வீல் பேஸ் 3 ஆயிரத்து 105 மி.மீட்டர் ஆகும். பொதுவாக மற்ற நிறுவனங்களின் கார்களை காட்டிலும் பிஎம்டபுள்யூ காரின் கேபின் வசதி மிகவும் அதிகளவிலும், வசீகரமாகவும், பல்வேறு சிறப்புகள் அடங்கிய வகையிலும் கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்த காரிலும் அதன் சிறப்புகள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

விலை என்ன?

இந்த புதிய BMW i5 LWB காரின் விலை ரூபாய் 90 லட்சம் முதல் ரூபாய் 1 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. சொகுசு கார்கள் வாங்க விரும்புபவர்களின் விருப்பமாக இந்த கார் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த எஸ்யூவி காரில் முன்பக்கம் தங்க நிறத்திலான கிரில் கம்பிகள் பிஎம்டபுள்யூ-வின் கம்பீரத்தை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இது டிஆர்எல்எஸ் விளக்குகள் ஆகும். டைட்டானியம் வெண்கலத்தில் பம்பர் பொருத்தப்பட்டுள்ளது.

கேபின் வசதிகள்:

உட்புறம் ட்வின் டிஸ்ப்ளே செட்டப் செய்யப்பட்டுள்ளது. இந்த டேஷ்போர்டில் காரின் அனைத்து சிறப்புகள் பற்றிய தரவுகளும் உள்ளது. இந்த காரில் ஸ்டீயரிங்கின் கீழ்பக்கம் மட்டும் சமமாக இருக்கும் ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் பொருத்தப்பட்டுள்ளது. தோலால் ஆன இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. பின் இருக்கையில் அமர்பவர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் கால்களை நீட்டிக்கொள்ளும் அளவிற்கு இட வசதி உள்ளது.

ஓட்டுநர் டிஸ்ப்ளே 12.3 இன்ச் ஆகும். மற்றொரு டிஸ்ப்ளே 14.9 இன்ச் ஆகும். உயர்தர பாதுகாப்பு அம்சம் கொண்ட பிஎம்டபுள்யூ காரில் லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது. டயர் ப்ரஷர் மானிட்டரிங் வசதி, முன்பக்கமும், பின்பக்கமும் பார்க்கிங் சென்சார் வசதி, எலக்ட்ரானிக் ப்ரோக்ராம் வசதி உள்ளது.

மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வரும் சூழலில், பிஎம்டபுள்யூ நிறுவனம் தனது புதிய பிஎம்டபுள்யூ i5 எல்.டபிள்யூ.பி (BMW i5 LWB) மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ஒரே சார்ஜில் 699 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் திறன் கொண்டது.
இந்த நவீன மின்சார காருக்கான முன்பதிவு பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி உள்ளன. இந்த கார் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் அதன் விலை குறித்த அறிவிப்புகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.