PulseNews
தொழில்நுட்பம்

அண்டவெளியின் அகோரப் பசி: சிறிய விண்மீன் திரளை விழுங்கி வளர்ந்த பால்வெளி

பால்வெளி விண்மீன் திரள் (Milky Way) இன்று நாம் காணும் பிரம்மாண்ட வடிவத்தை எவ்வித மாற்றமும் இன்றி தானாகப் பெறவில்லை. தொடக்க காலத்தில் தன் ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட சிறிய விண்மீன் திரள்களைத் தன்வயப்படுத்தி உள்வாங்கிக் கொண்டதன் மூலமே இது இவ்வளவு பெரிய அமைப்பாக வளர் உருவெடுத்துள்ளது. சமீபத்திய ஆய்வுகளின்படி, சுமார் 1180 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மிகப்பெரிய விண்மீன் திரள் இணைப்பு (Galaxy Merger) பற்றிய அறிய தகவல்கள் வெளிவந்துள்ளன. பேரண்டம் தோன்றி வெறும் 210 கோடி ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்த காலத்தில், அதாவது பேரண்டத்தின் தற்போதைய வயதில் 15 சதவீத காலத்திலேயே இந்த நிகழ்வு நடந்துள்ளது. 'லோ-எனர்ஜி-கிராகன்-ஹெர்குலஸ்' (Low-energy-Kraken-Heracles) என்று பெயரிடப்பட்ட ஒரு சிறிய விண்மீன் திரளை நமது பால்வெளி உட்கொண்டது. இந்தச் சிறிய விண்மீன் திரளானது, அந்த காலக்கட்டத்திலிருந்த இளைய பால்வெளியின் நிறையில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. அதாவது, சுமார் 50 கோடி சூரியன்களின் அளவுக்குச் சமமான விண்மீன்களை அது உள்ளடக்கியிருந்தது. 🚨 James Webb Space Telescope has captured the Sombrero Galaxy in extraordinary detail. pic.twitter.com/iBTMKzBEoJ — Night Sky Now (@NightSkyNow) August 15, 2026 வானியலாளர்கள் இந்த மோதலை நேரடியாகப் பார்க்காமல், அதன் எச்சங்களைக் கொண்டே இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் கண்டறிந்துள்ளனர். பால்வெளியின் மையப் பகுதியில் உள்ள மிகவும் பழமையான 'கோள விண்மீன் கொத்துகளை' (Globular Clusters) அவர்கள் விரிவாகக் குறிப்பிட்டனர். ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமையின் 'காயா' (Gaia) விண்கலம் அளித்த தரவுகளின் மூலம், விண்மீன்களின் வயது, அவற்றின் ரசாயன அமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதன்மூலம், அந்த விண்மீன்கள் பால்வெளியில் உருவானவை அல்ல, மாறாக 'லோ-எனர்ஜி-கிராகன்-ஹெர்குலஸ்' விண்மீன் திரளால் விட்டுச் செல்லப்பட்டவை என்பது உறுதியானது. The Largest and Sharpest Image of the Andromeda Galaxy This is the largest image ever released by the Hubble Telescope, showing over 100 million stars and thousands of star clusters within a section of the galaxy's disk spanning more than 40,000 light-years. pic.twitter.com/Y7bbtAqKm3 — Black Hole (@konstructivizm) August 19, 2026 ஒரு விண்மீன் திரள் மற்றொரு விண்மீன் திரளை உண்ணும்போது, நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதிக்கொள்வதில்லை. ஏனெனில் அவற்றுக்கு இடைப்பட்ட தூரம் மிக அதிகம். மாறாக, ஈர்ப்பு விசையானது விண்மீன் திரள்களைப் பிளந்து, அவற்றின் நட்சத்திரங்கள், வாயுக்கள் மற்றும் இருண்ட பொருள்களை ஒன்றோடொன்று கலக்கச் செய்கிறது. இந்த இணைப்பு மிகவும் மென்மையாக நடந்திருந்தாலும், வாயு மேகங்களின் தொடர்பினால் புதிய நட்சத்திரங்கள் உருவாகின. நமது பால்வெளிக்கு இதுவே கடைசி உணவாக அமையவில்லை. இதன்பின்னர், சுமார் 1000 கோடி ஆண்டுகளுக்கு முன்பு 'காயா-சாசேஜ்-என்செலடஸ்' என்ற விண்மீன் திரள் பால்வெளியுடன் மோதி அதன் அமைப்பையே மாற்றியது. தற்போதும் கூட 'சாகிட்டாரியஸ் குறு விண்மீன் திரள்' (Sagittarius dwarf galaxy) பால்வெளியின் ஈர்ப்பு விசையால் சிதைக்கப்பட்டு வருகிறது. இத்தகைய கண்டுபிடிப்புகள், நமது பால்வெளி விண்மீன் திரள் எவ்வாறு உருவானது மற்றும் வளர்ந்தது என்ற வரலாற்றுப் பாதையைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள வானியலாளர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அண்டவெளியின் அகோரப் பசி: சிறிய விண்மீன் திரளை விழுங்கி வளர்ந்த பால்வெளி
PulseNews சுருக்கம்

பால்வெளி விண்மீன் திரள் உருவான விதம் குறித்த புதிய ஆய்வில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபஞ்சம் தோன்றிய 210 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, சுமார் 1180 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு மிகப்பெரிய விண்மீன் திரள் இணைப்பு நிகழ்ந்துள்ளது.

தொடக்க காலத்தில் இருந்த சிறிய விண்மீன் திரள்களைத் தனது ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி பால்வெளி தன்னுள் இழுத்துக்கொண்டதால்தான், தற்போது நாம் காணும் பிரம்மாண்டமான வடிவத்தை அது பெற்றுள்ளது. இத்தகைய தொடர் செயல்பாடுகளின் மூலமே பால்வெளி இவ்வளவு பெரிய அமைப்பாக வளர்ந்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology