PulseNews
தொழில்நுட்பம்

சிம் கார்டுகள் வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியது மத்திய அரசு!

நாட்டில் அதிகரித்துவரும் சைபர் மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட், போலி சிம் கார்டு பிரச்சனைகளைத் தடுக்க, சிம் கார்டுகள் வாங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. புதிதாக சிம் கார்டு வாங்குபவர்களின் கைரேகை அல்லது முக அடையாள விவரங்களை நிகழ்நேரத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரி பார்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தனிநபர்கள் தங்களது பெயரில் அல்லது ஒரு அடையாள ஆவணத்தின் கீழ் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகள் வைத்துக் கொள்ளலாம் என்றும், டிஜிட்டல் நுண்ணறிவுத் தளம் மூலம் வாடிக்கையாளரின் போட்டோ சரிபார்க்கப்பட்டு, கூடுதல் சிம் கார்டுகள் வாங்குவது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் சிம் கார்டு பெறுபவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், சிம் கார்டு மோசடியில் ஈடுபட்டால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒருவருடைய ஆதார் எண்ணில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன என்பதை சஞ்சார் சாத்தி போர்ட்டல் ((Sanchar Saathi Portal)) என்ற இணைய தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Polimer News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சிம் கார்டுகள் வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியது மத்திய அரசு!
PulseNews சுருக்கம்

நாட்டில் அதிகரித்து வரும் சைபர் மோசடிகள், டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் போலி சிம் கார்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்க, சிம் கார்டுகள் வாங்குவதற்கான விதிகளை மத்திய அரசு மிகவும் கடுமையாக்கியுள்ளது. இனி புதிதாக சிம் கார்டு வாங்குபவர்களின் கைரேகை அல்லது முக அடையாளங்களை நிகழ்நேரத்தில் சரிபார்க்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு தனிநபர் தனது பெயரிலோ அல்லது ஒரு அடையாள ஆவணத்திலோ அதிகபட்சமாக 9 சிம் கார்டுகளை மட்டுமே வைத்திருக்க முடியும் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், டிஜிட்டல் நுண்ணறிவுத் தளம் மூலம் வாடிக்கையாளர்களின் விவரங்களை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology