ரூ.10 லட்சத்திற்குள் டர்போ பெட்ரோல் கார்கள்: வேகத்தை விரும்பும் உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ!

ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் இந்தியாவின் அதிவேக டர்போ பெட்ரோல் கார்கள்!

தற்போதைய இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், வாடிக்கையாளர்கள் கார்களை வாங்கும்போது சிறந்த மைலேஜை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. வாகனம் ஓட்டும்போது அதிக வேகமும், சிறப்பான பிக்கப்பும் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

உங்கள் பட்ஜெட் 10 லட்ச ரூபாய்க்குள் இருந்தால், சாதாரண இன்ஜின்களை விட டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட வாகனங்களை நீங்கள் தேர்வு செய்வது சிறந்தது. டர்போ இன்ஜின்கள் குறைவான சிசி கொண்டிருந்தாலும், காருக்கு மிகப்பெரிய ஆற்றலை வழங்குகின்றன.

இதன் மூலம் இந்த கார்கள் 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் சில விநாடிகளிலேயே எட்டிவிடும். 10 லட்ச ரூபாய் விலைக்குள் வேகத்தை விரும்புவோரின் முதல் தேர்வாக மாறியுள்ள 5 சிறந்த கார்களைப் பற்றி இங்கே காணலாம்.

ஹூண்டாய் ஐ20 என் லைன் (Hyundai i20 N Line)

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார், பட்ஜெட் பிரிவில் மிகவும் பிரபலமான வாகனங்களில் ஒன்றாகும். இது 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது. இது 120 PS பவரை உருவாக்குகிறது.

இந்த கார் 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிவிடும். இதன் ஸ்போர்ட்டியான வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த எக்ஸாஸ்ட் சத்தம் ஆகியவை இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன.

டாடா அல்ட்ராஸ் ரேசர் (Tata Altroz Racer)

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மலிவு விலை ஹேட்ச்பேக் காரான அல்ட்ராஸின் சிறப்பு பெர்ஃபார்மன்ஸ் மாடலை 'அல்ட்ராஸ் ரேசர்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதுவும் 120 PS பவரை வெளிப்படுத்தும். வேகத்தை விரும்புவோருக்காக வடிவமைக்கப்பட்ட இந்த கார், 0 முதல் 100 கி.மீ வேகத்தை, சுமார் 10 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டது.

சிட்ரோயன் சி3 டர்போ (Citroen C3 Turbo)

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயனின் சி3 காரின் டர்போ வேரியண்ட், குறைந்த விலையில் அதிக பிக்கப்பை வழங்குவதில் பெயர் பெற்றது. இதில் உள்ள 1.2 லிட்டர் டர்போ இன்ஜின் 110 PS பவரையும் சிறப்பான டார்க் திறனையும் உருவாக்குகிறது.

மேலும், இதன் எடை குறைவான உடல் வடிவமைப்பு காரணமாக, பந்தயங்களின்போது மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவதோடு, தொடக்கத்திலேயே மிகச் சிறந்த பிக்கப்பை வழங்குகிறது.

மாருதி சுசுகி ஃபிராங்க்ஸ் (Maruti Suzuki Fronx)

மாருதி நிறுவனத்தின் இந்த கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார், ஸ்டைலிஷ் வடிவமைப்பு மற்றும் செயல்திறனைக் கொண்டுள்ளது. இதன் சில டர்போ வேரியண்ட்கள் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் கிடைக்கின்றன.

இதில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ இன்ஜினை உள்ளது. நெடுஞ்சாலைகளில் நிலையான பயணத்தை வழங்கும் இந்த கார், மற்ற மாருதி கார்களை விட மிகவும் கூர்மையான த்ரோட்டில் ரெஸ்பான்ஸை கொண்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO)

மஹிந்திரா நிறுவனத்தின் இந்தப் புதிய சப் காம்பேக்ட் எஸ்யூவி காரின் பேஸ் மற்றும் மிட் வேரியண்ட்கள் 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. இது அதன் பிரிவிலேயே மிகவும் சக்திவாய்ந்த வாகனங்களில் ஒன்றாகும். 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ள இது, ஆரம்ப நிலை மாடலிலிருந்தே சிறந்த பவரை வழங்குகிறது.

இதன் எடை அதிகமாக இருந்தாலும், இதிலுள்ள இன்ஜின் நெடுஞ்சாலையில் பெரிய வாகனங்களுக்கு போட்டியளிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. அதிக வேகத்திலும் காரின் பேலன்ஸை பராமரிக்கும் சிறப்பான சஸ்பென்ஷனை இது கொண்டுள்ளது.

தற்போதைய கார் சந்தையில், வாடிக்கையாளர்கள் சிறந்த மைலேஜை தாண்டி, வாகனத்தின் வேகம் மற்றும் சிறந்த பிக்கப் வசதிக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இத்தகைய வேகத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக, 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் கார்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் உள்ள டர்போ பெட்ரோல் கார்களில் சிறந்த 5 கார்களைத் தேர்ந்தெடுத்து, அதற்கான விரிவான பட்டியலை இங்கே காணலாம். உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற அதிவேக பயண அனுபவத்தை வழங்கும் கார்களைப் பற்றி தெரிந்துகொள்ள இது உதவும்.