விஜய் அரசின் முதல் முயற்சி: முதலீடுகளை கொட்டும் டேட்டா சென்டர், ஆட்டோ மொபைல் துறைகள்
தமிழக அரசு நேற்று (ஆகஸ்ட் 13) வெளியிட்ட அறிவிப்பின்படி, மாநிலம் ரூ.1,02,514 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. இதில் டேட்டா சென்டர்கள், ஆட்டோமொபைல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகள் அதிகளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளன. தென் மாநிலத்தில் த.வெ.க அரசு அமைந்து 100 நாட்களுக்குள் இந்த மிகப்பெரிய முதலீடுகள் கிடைத்துள்ளன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: சென்னையில் நடைபெற்ற “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026” நிகழ்ச்சியில் இந்த முதலீட்டு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டன. உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மையமாக தமிழகத்தின் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், ஏற்கனவே வளர்ச்சியடைந்துள்ள தொழில் மையங்களுக்கு அப்பாலும் தொழில்துறை நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் மூலம் தமிழகம் முழுவதும் 1.21 லட்சத்துக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் முதலீட்டு திட்டங்களில் டேட்டா சென்டர்கள் முன்னிலை தமிழக அரசின் தகவலின்படி, டேட்டா சென்டர் துறை அதிகபட்ச முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளது. இத்துறையில் ரூ.26,417 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஆட்டோமொபைல் துறைக்கு ரூ.17,073 கோடி முதலீட்டு உறுதிமொழிகள் கிடைத்துள்ளன. அதேபோல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு ரூ.15,787 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த முதலீட்டு கலவை, தமிழகத்தின் தொழில் வளர்ச்சித் திட்டத்தில் பாரம்பரிய உற்பத்தித் துறைகளுக்கும் புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான துறைகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுவதை காட்டுகிறது. ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தித் துறைகளின் மையமாக மட்டுமின்றி, எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர்கள், டேட்டா சென்டர்கள், விண்வெளி மற்றும் டீப்டெக் போன்ற துறைகளுக்கான முக்கிய முதலீட்டு தளமாகவும் தமிழகத்தை அரசு முன்னிறுத்தி வருகிறது. எல்&டி முதலீட்டு ஒப்பந்தம் முதலீட்டாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களில் லார்சன் டியூப்ரோ (Larsen & Toubro (L&T) நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இடம்பெற்றது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் எலக்ட்ரானிக்ஸ், டேட்டா சென்டர்கள் மற்றும் கப்பல் கட்டும் துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்துறை திறன்கள் என மூன்று முக்கிய துறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதனால், முதலீட்டாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஒரே ஒரு துறையில் மட்டும் குவியாமல், பல்வேறு தொழில்துறைகளிலும் பரவலாக இடம்பெற்றுள்ளன. முக்கிய மாவட்டங்களுக்கு வெளியே ரூ.40,700 கோடிக்கும் அதிகமான முதலீடு தமிழகத்தின் ஏற்கனவே வளர்ச்சியடைந்துள்ள தொழில் மையங்களுக்கு அப்பால் தொழில்துறை நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. மாநில அரசின் தகவலின்படி, மொத்த முதலீட்டு ஒப்பந்தங்களில் ரூ.40,700 கோடிக்கும் அதிகமான தொகை மாநிலத்தின் நான்கு முக்கிய தொழில் மாவட்டங்களுக்கு வெளியே செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 15 துறைகளில் அறிவிக்கப்பட்ட 106 திட்டங்களில் 54 திட்டங்கள் வளர்ந்து வரும் பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டங்கள் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 61,480 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரத்திற்கு ரூ.31,004 கோடி முதலீடு தனி மாவட்டங்களைப் பொறுத்தவரை, காஞ்சிபுரம் அதிக முதலீடுகளை ஈர்த்த மாவட்டமாக உருவெடுத்துள்ளது. த.வெ.க-வின் தகவலின்படி, முதலமைச்சர் விஜயின் கட்சியான த.வெ.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 திட்டங்களுக்காக ரூ.31,004 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம், தமிழக அரசு குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் அதிக முதலீட்டை பெற்ற மாவட்டமாக காஞ்சிபுரம் முதலிடத்தில் உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.22,268 கோடி முதலீடு முதலீட்டாளர் மாநாடு குறிப்பிடத்தக்க அளவிலான வெளிநாட்டு முதலீட்டு ஒப்பந்தங்களையும் ஈர்த்துள்ளது. 16 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்ற 30 திட்டங்கள் மூலம் ரூ.22,268 கோடி அந்நிய நேரடி முதலீட்டு (FDI) உறுதிமொழிகள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த முதலீட்டு முயற்சியில் முக்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்களாக இடம்பெற்றுள்ளன. மாநாட்டில் அறிவிக்கப்பட்ட மொத்த முதலீட்டு ஒப்பந்தங்களில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமானது வெளிநாட்டு முதலீடாகும். இதன் மூலம் உள்நாட்டு முதலீட்டாளர்களுடன் சர்வதேச நிறுவனங்களையும் தமிழகத்திற்கு ஈர்க்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சி வெளிப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர், டீப்டெக் துறைகளில் உயர்மதிப்பு வேலைவாய்ப்புகள் இந்த முதலீட்டு நடவடிக்கைகள் அதிக திறன் தேவைப்படும் வேலைவாய்ப்புகளையும் கணிசமான அளவில் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசின் தகவலின்படி, உருவாகும் என எதிர்பார்க்கப்படும் மொத்த வேலைவாய்ப்புகளில் சுமார் 21 சதவீதம், அதாவது 25,000-க்கும் அதிகமான வேலைகள் உயர்மதிப்பு கொண்ட பணிகளாக இருக்கும். எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர், விண்வெளி மற்றும் டீப்டெக் போன்ற துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தித் துறைகள் பரந்த அளவிலான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய நிலையில், செமிகண்டக்டர், விண்வெளி மற்றும் டீப்டெக் திட்டங்கள் மேலும் சிறப்பு திறன்கள் தேவைப்படும் பணிகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 13 திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டல் முதலீட்டாளர் மாநாடு எதிர்கால முதலீட்டு ஒப்பந்தங்களை அறிவிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. மொத்தம் ரூ.7,152 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்பட உள்ள 13 திட்டங்கள் மாநாட்டின்போது தொடங்கி வைக்கப்பட்டன. அவற்றுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் சில முதலீடுகள் வெறும் புரிந்துணர்வு ஒப்பந்த நிலையைக் கடந்து, திட்டங்களை நடைமுறைப்படுத்தும் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன என்பது தெரிய வருகிறது. மேலும், முதலீட்டாளர் மாநாட்டின்போது புதிய பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணைகளும் வழங்கப்பட்டன. தமிழகத்தின் முதலீட்டு கலவை உணர்த்துவது என்ன? ரூ.1.02 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி உத்தியில் மூன்று முக்கிய அம்சங்களை ஒன்றிணைக்கின்றன. முதலாவது, தமிழகத்தின் ஏற்கனவே வலுவாக உள்ள உற்பத்தித் துறை. இதற்கு ஆட்டோமொபைல் துறையில் கிடைத்துள்ள ரூ.17,073 கோடி முதலீட்டு உறுதிமொழி முக்கிய உதாரணமாகும். இரண்டாவது, உள்கட்டமைப்பு சார்ந்த தொழில்களின் விரிவாக்கம். குறிப்பாக, அதிகபட்சமாக ரூ.26,417 கோடி முதலீட்டு உறுதிமொழிகளை ஈர்த்துள்ள டேட்டா சென்டர் துறை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மூன்றாவது, தூய்மையான எரிசக்தியை நோக்கிய தமிழகத்தின் நகர்வு. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு ரூ.15,787 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. அதே நேரத்தில், எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர்கள், விண்வெளி மற்றும் டீப்டெக் துறைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மூலம் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புச் சங்கிலியில் தமிழகத்தை மேலும் உயர்த்தும் முயற்சியும் வெளிப்படுகிறது.

ஆகஸ்ட் 13 அன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, மாநிலத்தில் ரூ.1,02,514 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சென்னையில் நடைபெற்ற “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026” நிகழ்வின் வாயிலாக இந்த முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக டேட்டா சென்டர்கள், ஆட்டோமொபைல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகள் அதிக முதலீடுகளைப் பெற்றுள்ளன. த.வெ.க அரசு பதவியேற்ற 100 நாட்களுக்குள்ளாகவே இவ்வளவு பெரிய அளவிலான முதலீடுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.