PulseNews
தொழில்நுட்பம்

BSNL free data : வெறும் 1 ரூபாய்க்கு 24 நாட்களுக்கு இலவச டேட்டா.! அன்லிமிடேட் கால்- BSNL அசத்தல் அறிவிப்பு

BSNL அசத்தல் ஆஃபர்

நவீன காலத்தில் இணையதளம் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலை நீடித்து வரும் நிலையில், உள்ளங்கைக்குள் உலகம் என்ற அளவில் கையில் உள்ள போன் மூலம் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் எந்த ஒரு பொருளையும் வாங்க முடியும். அந்த அளவிற்கு இணையதள வசதி வளர்ந்துள்ளது. இந்த நிலையில் ஏர்டெல், ஜியோ என பல நிறுவனங்கள் போட்டி போட்டு பல சலுகைகளை அளித்து வரும் நிலையில், இதற்கு டப் கொடுக்க களத்தில் இறங்கியுள்ளது BSNL. இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு BSNL மூலம் FREEDOM 2.0 திட்டத்தில் 24 நாட்களுக்கு இலவச டேட்டா மற்றும் அன்லிமிடேட் கால் வசதியுடன் கூடிய ஒரு ரூபாய்க்கு ஒரு 4G வசதி சிம் கார்டு விற்பனை தொடக்கப்பட்டுள்ளது.

BSNL இலவச டேட்டா மற்றும் அன்லிமிடேட் கால்

இது தொடர்பாக மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள BSNL அலுவலகத்தில் முதன்மை பொதுமேலாளர் லோகநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை BSNL வர்த்தகப் பகுதியில் 4G சிம் விற்பனை அதிகரித்ததன் மூலமாக வருமானம் 12% அதிகரித்துள்ளது. 4G சிம் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மதுரை BSNL மூலமாக FREEDOM 2.0 திட்டத்தில் 24 நாட்களுக்கு இலவச டேட்டா மற்றும் அன்லிமிடேட் கால் , 100 SMS வசதியுடன் கூடிய ஒரு ரூபாய்க்கு ஒரு 4G வசதி சிம் கார்டு விற்பனையானது செப்டம்பர் 12 ஆம் தேதி்வரை நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

BSNL மதுரை வர்த்தக பகுதியில் BSNL 990 இடங்களில் தனது சொந்த 990 மொபைல் டவர்கள் , 34 USO மொபைல் டவர்கள் என 1,014 மொபைல் டவர்கள் மூலமாக 4G நெட்வொர்க் வழங்கப்பட்டுவருவதாக குறிப்பிட்டார். இதுமட்டுமில்லாமல் திண்டுக்கல் மற்றும் காரைக்குடி ஆகியவற்றில் இதுவரை டவர்கள் இல்லாத பகுதிகளில் 34 டவர்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் கொடைக்கானல் ஆகியவற்றில் கூடுதலாக 28 டவர்களில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

BSNL சேட்டிலைட் போன்

இது மட்டுமில்லாமல் இயற்கை பேரிடர் காலங்களில் கடற்கரை மற்றும் வனப்பகுதிகள் ஆகியவற்றில் தொலை தொடர்பு இல்லாத நேரங்களில் பயன்படுத்தும் வகையில் BSNL நிறுவனம் முதன்முறையாக BSNL சேட்டிலைட் போன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறினார். இதில் அரசு பயன்பாட்டுக்கு, தனியார் பயன்பாட்டுக்கு கட்டணம் வித்தியாசத்துடன் விற்பனை செய்யப்படுவதாக BSNL தெரிவித்துள்ளார்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
BSNL free data : வெறும் 1 ரூபாய்க்கு 24 நாட்களுக்கு இலவச டேட்டா.! அன்லிமிடேட் கால்- BSNL அசத்தல் அறிவிப்பு
PulseNews சுருக்கம்

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, வெறும் 1 ரூபாய் கட்டணத்தில் 24 நாட்களுக்கு இலவச டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு வசதிகளை அந்த நிறுவனம் வழங்குகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தச் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ, ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology