அறிமுகமாகியது Jawa All Stars 42 FJ பைக்.. சும்மா அசத்தலா இருக்குது! விலை எவ்ளோ?

இந்தியாவில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ஒன்று ஜாவா. அந்த காலத்திலே ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்திற்கு போட்டியாக ஜாவா பைக்குகள் பார்க்கப்பட்டது. தற்போதும், இந்தியாவில் ஜாவா பைக்குகளுக்கு என்று தனி வரவேற்பு சந்தையில் உள்ளது.

Jawa All Stars 42 FJ:

ஜாவா நிறுவனம் இந்தியாவில் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள புதிய பைக் Jawa All Stars 42 FJ. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த Jawa All Stars 42 FJ பைக் அனைத்து ஜாவா ஷோரூம்களிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எக்ஸ் ஷோ ரூம் விலை ரூபாய் 2.02 லட்சம் ஆகும்.

சிறப்புகள்:

இதில் 334 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. லிக்யூட் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய Jawa All Stars 42 FJ பைக் ஆரோரா கிரீன், க்ரோம், மேட் ப்ளாக் வித் ப்ளாக் கிளாட், ரெட் கிளாட், நெபூலா ப்ளூ மற்றும் சிவப்பு வண்ணங்களில் வருகிறது. சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினான இந்த எஞ்ஜின் 29.17 பிஎஸ் ஆற்றல் கொண்டது. 7 ஆயிரத்து 500 ஆர்பிஎம் குதிரை ஆற்றல் கொண்டது. 29.62 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

41 மி.மீட்டர் டெலிஸ்கோபிக் ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் கேஸ் ஃபில்ட் ட்வின் பின்பக்கம் ஷாக் அப்சார்பர்ஸ் 5 ஸ்டெப் ப்ரீலோட் அட்ஜெஸ்ட்மென்ட் சஸ்பென்சன் கொண்டது. இதில் 6 கியர்கள் உள்ளது.

வசதிகள்:

320 மி.மீட்டர் டிஸ்க் ப்ரேக் முன்பக்கமும், 240 மி.மீட்டர் டிஸ்க் ப்ரேக் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 178 மி.மீட்டர் ஆகும். 12 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. 790 மி.மீட்டர் இருக்கை உயரம் கொண்டது.

எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வசதி உள்ளது. 50 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 4 வருட வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. இதன் வசீகரமான தோற்றம் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கிறது.

ஜாவா பைக்குகளுக்கு என்று இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், இந்த புதிய Jawa All Stars 42 FJ பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஜாவா, தற்போது தனது புதிய மாடலான 'Jawa All Stars 42 FJ' பைக்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்திற்குப் போட்டியாகக் கருதப்படும் ஜாவா பைக்குகளுக்கு, இந்திய சந்தையில் இன்றும் தனி வரவேற்பு இருந்து வருகிறது.
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த இந்த புதிய பைக், விரைவில் அனைத்து ஜாவா விற்பனையகங்களிலும் விற்பனைக்குக் கொண்டு வரப்படவுள்ளது.