மங்களூரு மாற்றத்தைத் தொடர்ந்து அதிரடி: தமிழகத்திலும் வலுக்கும் ரயில்வே கோட்ட மறுசீரமைப்பு கோரிக்கை
பாலக்காட்டு ரயில்வே கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மங்களூரு ரயில்வே நெட்வொர்க் சமீபத்தில் மைசூர் கோட்டத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிர்வாக மாற்றத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் பொள்ளாச்சி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்களும் தங்களது ரயில்வே எல்லைகளை உடனடியாக மறுசீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இதற்கான கோரிக்கைகள் தற்பொழுது தீவிரமடைந்து வருகின்றன. இதில் முக்கிய கோரிக்கையாக, பாலக்காடு கோட்டத்தின் கீழ் இயங்கும் பொள்ளாச்சி ரயில்வே பகுதியை தமிழ்நாட்டில் உள்ள மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர். பொள்ளாச்சி பகுதி தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களோடு நெருங்கிய பயணத் தொடர்பையும், பொருளாதார ரீதியிலான பிணைப்பையும் கொண்டுள்ளது. எனவே, இதனை தமிழகத்திற்குட்பட்ட ரயில்வே கோட்டத்தின் கீழ் கொண்டுவருவது நிர்வாக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, அப்பகுதி பயணிகளுக்கு கூடுதல் வசதிகளையும் அளிக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மங்களூரு பகுதியானது தென்மேற்கு ரயில்வேயின் மைசூர் கோட்டத்துடன் இணைக்கப்பட்டதே இந்த புதிய விவாதத்திற்கு முக்கிய தூண்டுகோலாக அமைந்தது. இந்த மாற்றத்தைச் சுட்டிக்காட்டும் மக்கள், பாலக்காடு கோட்டத்தின் கீழ் உள்ள தமிழக எல்லைப் பகுதிகளையும் இதே முறையில் தகுந்த கோட்டங்களுக்கு மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், திருநெல்வேலி முதல் குழித்துறை வரையிலான ரயில் பாதையையும், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளையும் முழுமையாக மதுரை ரயில்வே கோட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தெற்கு தமிழகப் பகுதிகளை ஒரே நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணைப்பது அப்பகுதி மக்களுக்கான ரயில் போக்குவரத்து மற்றும் சேவைகளை மேலும் உயர்த்த உதவும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் கீழ் இருந்த மங்களூரு ரயில்வே நெட்வொர்க், அண்மையில் மைசூர் கோட்டத்துடன் இணைக்கப்பட்டது. இந்த நிர்வாக மாற்றத்திற்குப் பிறகு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில்வே எல்லைகளை மறுசீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக பொள்ளாச்சி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்களது பகுதிகளை உள்ளடக்கிய ரயில்வே கோட்டங்களை மாற்றி அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இக்கோரிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.