AI தொழில்நுட்பம் உதவியுடன் உலகின் முதல் அறுவை சிகிச்சை..!
லண்டன் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் 48 வயதான ரைஸ் ஹிபர்ட் (Rhys Hibbert) என்பவருக்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் மூளையில் இருந்த கட்டி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பிட்யூட்டரி சுரப்பியில் 11 மில்லிமீட்டர் அளவு இருந்த கட்டியை நரப்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் வெற்றிகரமாக அகற்றினர். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட உலகின் முதல் அறுவைச் சிகிச்சை இது என மருத்துவர்கள் தெரிவித்தனர். கேமரா உள்ள எண்டோஸ்கோப்பி கருவியை மூக்கு வழியாக மூளையின் பின்பக்கம் உள்ள பிட்யூட்டரி சுரப்பி வரை கொண்டு சென்று மிகச் சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பல்கலைக் கழகத்திலேயே உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், கேமரா மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்து அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடிக்க உதவியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

லண்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 48 வயதான ரைஸ் ஹிபர்ட் என்பவரின் மூளையில் இருந்த கட்டி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. பிட்யூட்டரி சுரப்பியில் அமைந்திருந்த 11 மில்லிமீட்டர் அளவிலான அந்தக் கட்டியை, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூக்கு வழியாக எண்டோஸ்கோப்பி கருவியைச் செலுத்தி அறுவை சிகிச்சை மூலம் நீக்கினர்.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட உலகின் முதல் அறுவை சிகிச்சை இது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நவீன தொழில்நுட்பத்தின் துணையோடு அறுவை சிகிச்சை நிகழ்ந்தது மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.