PulseNews
தொழில்நுட்பம்

இந்தியா டூ தென்கொரியா வரை... 10,000 கி.மீ தூரத்திற்கு படர்ந்த அசுர மழை மேகம்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

இந்தியாவில் இருந்து தென்கொரியா வரை 10,000 கி.மீ. நீளத்திற்கு பரந்து விரிந்துள்ள பிரமாண்ட மழை மேகக்கூட்டத்தை விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள், ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளை மூடியிருக்கும் இந்த அசுர மேகவளையத்தை வெளிப்படுத்தியுள்ளன. வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி இது 2026-ம் ஆண்டின்தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமான கட்டத்திற்குள் நுழைந்துள்ளதன் அறிகுறியாகும். இந்த மேக வளையம் வரவிருக்கும் சில நாட்களில் இந்தியப் பகுதிகளின் பெரும்பாலான இடங்களுக்கு பரவலான மழைப்பொழிவைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது இது தொடர்ச்சியான மேகமாகத் தெரிந்தாலும், உண்மையில் ஒரே மேகம் அல்ல. ஆசியப் பருவமழையால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட அடர்த்தியான, மழைக்கால மேகங்களின் பெரிய மண்டலமாகும். வெப்பமான, ஈரப்பதம் நிறைந்த காற்று வளிமண்டலத்திற்கு மேலே உயரும் போது இந்த மேகங்கள் உருவாகின்றன. காற்றின் வெப்பநிலை குறையும் போது, காற்றில் உள்ள நீராவி நீர்த்துளிகளாக அல்லது மழையாக மாறுகிறது. தற்போது காணப்படும் இந்த மேக வளையம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் தொடங்கி இமயமலை, சீனா மற்றும் தென் கொரியா வரை நீண்டுள்ளது. இது பருவமழையின் அசுரத்தனமான பிரம்மாண்டத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. இது ஏன் உருவானது? பல வானிலை அமைப்புகள் ஒன்றாக இணைந்து செயல்படுவதே இதற்கு முக்கியமான காரணமாகும். தென்மேற்கு பருவமழை இந்தியா முழுவதும் தொடர்ந்து தீவிரமாக உள்ளது. பலத்த காற்று அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் இருந்து அதிகளவிலான ஈரப்பதத்தை எடுத்துச் செல்கிறது. அதே நேரத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மற்றும் சுழற்சி அமைப்புகள் ஈரப்பதமான காற்றை மேலே உயர்த்த உதவுகின்றன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இடிமின்னலுடன் கூடிய புயல்களை ஒரே நீண்ட மழைப் பட்டையாக (rain belt) ஒருங்கிணைத்துள்ளன. இது வழக்கத்தை விட அதிக மழையைத் தருமா? விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இதுபோன்ற பிரமாண்ட மேக வளையம் உருவாவது பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்பதற்கு முழுமையான உத்தரவாதம் அல்ல. இருப்பினும், பரவலான மழைப்பொழிவிற்கு வளிமண்டலம் மிகவும் சாதகமாக உள்ளது என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. இந்த வானிலை அமைப்புகள் தொடர்ந்து தீவிரமாக இருந்தால், அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விஞ்ஞானிகள் இதனை எவ்வாறு கண்காணிக்கிறார்கள்? இந்த மேக வளையம் ஆசியாவின் வானிலை அமைப்புகளுக்கு இடையே உள்ள பரஸ்பர இணைப்பை வெளிப்படுத்துகிறது. இந்தியப் பருவமழை என்பது மிகப்பெரிய வளிமண்டல சுழற்சியின் ஒரு பகுதி மட்டுமே ஆகும். மழைப்பொழிவு கணிப்புகளின் துல்லியத்தை மேம்படுத்தவும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கைகளை முன்கூட்டியே வழங்கவும் விஞ்ஞானிகள் செயற்கைக்கோள்களின் உதவியுடன் இந்த மேக வளையங்களை ஆராய்ந்து வருகின்றனர். வானிலை ஆய்வாளர்களுக்கு, 10,000 கி.மீ தூரத்திற்கு நீண்டுள்ள இந்த மழை மேகம் ஈர்க்கக்கூடிய செயற்கைக்கோள் படம் மட்டுமல்ல; அது ஆசியப் பருவமழையின் பின்னணியில் இயங்கும் வலிமையான ஆற்றல்களைப் புரிந்துகொள்வதற்கான முக்கியத் திறவுகோலாகும்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology