10 நிமிஷம் சார்ஜ் போட்டா 2 மணி நேரம் பாட்டு: நாய்ஸ் மாஸ்டர் பட்ஸ் 2 வாங்கலாமா, வேண்டாமா?
2025-ல் வெளியான நாய்ஸ் மாஸ்டர் பட்ஸ் அதன் வித்தியாசமான மற்றும் தனித்துவமான டிசைனால் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 2026-ல் சந்தைக்கு வந்துள்ள நாய்ஸ் மாஸ்டர் பட்ஸ் 2, பிரபல ஆடியோ நிறுவனமான பாஸ் கூட்டணியுடன் களமிறங்கியுள்ளது. ரூ.10,000-க்குள் கிடைக்கும் இந்த பட்ஸ், உண்மையிலேயே அந்த விலைக்கு தகுதியானதுதானா? விரிவாகப் பார்ப்போம். டிசைனை பொறுத்தவரை நாய்ஸ் நிறுவனம் பெரிய மாற்றங்களை செய்யவில்லை. அதுவே சிறந்த விஷயமாகவும் அமைந்திருக்கிறது. பழைய கிராமஃபோன் ரெக்கார்டு போன்ற இதன் கேஸ் டிசைன் மிகவும் 'கூலாக' இருக்கிறது. இருப்பினும், இந்த வளைவுகளில் லேசாக தூசி படிய வாய்ப்புள்ளது. கார்பன் ,ஆரம், மற்றும் மெர்குரி என 3 அட்டகாசமான நிறங்களில் கிடைக்கிறது. கூட்டத்தில் தனித்து தெரியும் இந்த டிசைனில் எது சிறந்தது என்று தேர்ந்தெடுப்பது கடினம். மிகக் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டுள்ளதால், நீண்ட நேர பயணங்களுக்கும் இசை கேட்பதற்கும் வசதியாக உள்ளது. ஐபி.எக்ஸ்.5 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழ் பெற்றிருப்பதால், கடும் உடற்பயிற்சியின் போதும் காதை விட்டு நழுவாமல் பாதுகாப்பாக பொருந்துகிறது. கேஸின் மூடியை திறந்தவுடனே ’சவுண்ட் பை போஸ்’ என்ற பிராண்டிங் உங்களை கவரும். போஸ் உடனான இந்த இணக்கம், இதன் ஆடியோ தரத்தை வேறொரு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. தெளிவான ஹைஸ் மற்றும் மிட்ஸ் உடன்கூடிய பெலன்ஸ் சவுண்ட் அனுபவத்தை தருகிறது. இந்த விலை பிரிவை விட மிக உயர்தரமான ஆடியோவை இது வழங்குகிறது. 51 டி.பி வரை செயல்படும் ஏ.என்.சி வசதி இருப்பதால், சுற்றியிருக்கும் சத்தங்களை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது. எளிமையான செட்ட மற்றும் உங்களது விருப்பத்திற்கு ஏற்ப ஒலியை மாற்றியமைக்க பல செட்டிங்ஸ்களை இதன் ஆப் வழங்குகிறது. புட்ஸில் 6 மணி நேரமும், கேஸுடன் சேர்த்து மொத்தம் 30 மணி நேரமும் பாடல்கள் கேட்கலாம் என நிறுவனம் கூறியுள்ளது. சோதனையிலும் இது துல்லியமாக நிரூபணமாகியுள்ளது. 2026-ன் நவீன அம்சமாக, வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 2 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். சிறந்த ஆடியோ தரம், அட்டகாசமான டிசைன் மற்றும் நம்பகமான பேட்டரி லைஃப் என அனைத்தையும் ரூ.10,000-க்குள் வழங்கும் நாய்ஸ் மாஸ்டர் பட்ஸ் 2, இந்த பட்ஜெட்டில் சிறந்த தேர்வு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பாஸ் (Bose) தொழில்நுட்பத்துடன் 2026-ல் வெளியாகியுள்ள நாய்ஸ் மாஸ்டர் பட்ஸ் 2, தனித்துவமான கிராமஃபோன் டிசைன், சிறந்த ஆடியோ தரம் மற்றும் 10 நிமிட சார்ஜில் 2 மணிநேர பேட்டரி வசதியுடன் 10,000 ரூபாய்க்குள் கிடைக்கும் மிகச்சிறந்த தேர்வாகும். நீண்ட பயணங்கள் மற்றும் உடற்பயிற்சிகளுக்கு ஏற்றவாறு வசதியாகவும், நீடித்து உழைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்ஸ், விலைக்கு ஏற்ற முழுமையான அனுபவத்தை வழங்குகிறது.
மூலம்: The Indian Express