இ ஸ்கூட்டர்களின் ராணி.. வரப்போது Vespa Electric Scooter - மைலேஜ், விலை எவ்ளோ?

இந்தியாவில் நாளுக்கு நாள் மின்சார வாகனங்களுக்கான பயன்பாடு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏதர், ஓலா இந்திய மின்சார இரு சக்கர வாகன சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், டிவிஎஸ், பஜாஜ், ஹோண்டா நிறுவனங்களும் தங்களது மின்சார இரு சக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

Vespa Electric Scooter:

மின்சார இரு சக்கர வாகனங்களிலே இ ஸ்கூட்டர்களின் விற்பனை சக்கைப் போடு போட்டு வருகிறது. ஸ்கூட்டர் விற்பனையில் இந்தியாவில் ஒரு தவிர்க்க முடியாத நிறுவனமாக திகழ்வது வெஸ்பா. வெஸ்பா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

இ ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வரும் சூழலில், வெஸ்பா நிறுவனமும் இ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. அவர்களின் Vespa Electric Scooter இந்திய சந்தையில் அறிமுகமாக தயாராக உள்ளது. இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைலேஜ் எவ்வளவு?

இந்த இ ஸ்கூட்டரில் 3.6 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 3.5 மணி நேரம் வரை நேரம் ஆகலாம் என்று கருதப்படுகிறது. ட்யூப்லஸ் டயர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

வெஸ்பா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. இந்த Vespa Electric Scooter அறிமுகமானால் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த இ ஸ்கூட்டர் அறிமுகமானால் விற்பனையில் அசத்தி வரும் மின்சார ஸ்கூட்டர்களான பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எஸ்1 ப்ரோ தேர்ட் ஜென், ஏதர் 450 எக்ஸ் ஆகிய வாகனங்களுக்கு கடும் சவால் அளிக்கும் என்று கருதப்படுகிறது.

எப்போது அறிமுகம்?

இந்த Vespa Electric Scooter இ ஸ்கூட்டர் எப்போது அறிமுகம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்த இ ஸ்கூட்டர் அறிமுகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட வெஸ்போ எலெட்ரிகா என்ற இ ஸ்கூட்டரை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் இந்த Vespa Electric Scooter வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெண் வாடிக்கையாளர்களை குறிவைத்து தனது வாகனங்களை வடிவமைக்கும் வெஸ்பா இந்த இ ஸ்கூட்டரையும் வடிவமைத்துள்ளது. இதன் அறிமுகத்திற்காக வாடிக்கையாளர்கள் காத்துள்ளனர். இதன் வசீகரமான தோற்றம் தற்போதே இணையத்தில் வைரலாகி அசத்தி வருகிறது.

மூலம்: Abp News