ஒரே சார்ஜில் 517 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது MG Hector Tomahawk EV கார்! விலை எவ்ளோ?

இந்தியாவில் விற்பனையாகும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

எம்ஜி நிறுவனம் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ள கார் MG Hector Tomahawk. இந்தியாவில் மின்சார கார்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த காரை மின்சார காராக எம்ஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கார் 5 மற்றும் 7 சீட்டர் காராக அறிமுகமாகியுள்ளது.

இதன் விலை விவரம்:

1. Excite - 7 சீட்டர் - ரூபாய் 19.49 லட்சம்

2. Exclusive - 7 சீட்டர் - ரூபாய் 21.99 லட்சம்

3. Essence - 7 சீட்டர் - ரூபாய் 23.49 லட்சம்

4. Essence - 5 சீட்டர் - ரூபாய் 22.99 லட்சம்

இந்த கார் பேட்டரி அஸ் எ சர்வீஸ் முறையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. அதில், இதன் தொடக்க விலை ரூபாய் 13.99 லட்சம் ஆகும்.

மைலேஜ்:

இதில் 55.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 310 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 517 கிலோமீட்டருக்கு மேலஜ் மைலேஜ் அளிக்கிறது. ஏசி சார்ஜிங்கில் 7.4 கிலோவாட்டும், டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கில் 90 கிலோவாட்டும் ஆகும். இதில் டிக்கி வசதி 610 லிட்டர் ( 5 சீட்டர்) ஆகும். 7 சீட்டர் காருக்கு 528 லிட்டர் ஆகும்.

எஸ்யூவி காரான இந்த கார் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது ஆகும். இந்த காரில் லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், பென்ட் க்ரூஸ் அசிஸ்டன்ஸ், ட்ராஃபிக் ஜாம் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் லேன் டிபார்ச்சர் ப்ரெவென்சன் வசதிகள் உள்ளது.

வசதிகள்:

முன்பக்க கொலிசன் வார்னிங் வசதி உள்ளது. ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி ப்ரேக்கிங் வசதி உள்ளது. ஆட்டோமெட்டிக் பெடஸ்ட்ரியன் ப்ரேக்கிங் வசதி உள்ளது. இன்டெலிஜன் ஹைட்ராலிக் ப்ரேக் அசிஸ்டன்ஸ் மற்றும் இன்டெலிஜன்ட் முகப்பு விளக்குகள், இன்டெலிஜன்ட் முகப்பு விளக்குகள் கன்ட்ரோல் வசதி உள்ளது.

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ரம், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் வித் எலக்ட்ரானிக் ப்ரேக் டிஸ்ட்ரிப்யூஷன் வசதிகள் உள்ளது. ஆட்டோ ஹோல்ட் வசதி உள்ளது. எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக் வசதி உள்ளது. பேட்டரி வாடகை முறையில் ஒரு கிலோமீட்டருக்கு 4.9 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

இந்த கார் பச்சை நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்யூவி காரான இந்த கார் மிகவும் வசீகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிரபலமான எம்ஜி மோட்டார் நிறுவனம், தனது புதிய எலக்ட்ரிக் காரான 'எம்ஜி ஹெக்டர் டொமாஹாக்' (MG Hector Tomahawk) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மின்சார கார்களுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், இந்த புதிய கார் ஒரே சார்ஜில் 517 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கார் 5 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட வசதிகளுடன் சந்தைக்கு வந்துள்ளது. இதில் 7 இருக்கைகள் கொண்ட 'எக்சைட்' (Excite) மாடலின் விலை 19.49 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.