ஒரே ரீசார்ஜில் 15 ஓடிடி ஆப்ஸ் + அன்லிமிடெட் 5ஜி: ஜியோ களமிறக்கிய மெகா ஓடிடி ஆஃபர்; முழு விவரம்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காகப் புதிய ஓடிடி பாஸ் (Jio OTT Pass) ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள திட்டத்துடன் கூடுதலாகப் புதிய வேலிடிட்டி கொண்ட திட்டங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஜியோ ஓடிடி பாஸ் பிளான் - முழு விவரங்கள் ரூ. 200 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டி, 30GB அதிவேக டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5G வசதி. ரூ. 550 திட்டம் (புதியது): 84 நாட்கள் வேலிடிட்டி, 90GB அதிவேக டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5G வசதி. ரூ. 2000 திட்டம் (புதியது): 365 நாட்கள் வேலிடிட்டி, 365GB அதிவேக டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5G வசதி. (குறிப்பு: தங்களது கணக்கில் ஆக்டிவ் பேஸ் பிளான் வைத்திருக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த ஓடிடி பாஸ் பேக்குகளை ரீசார்ஜ் செய்து பயன்படுத்த முடியும்.) மாதம் ரூ.1,500 மதிப்புள்ள பொழுதுபோக்கு நன்மைகள் ஒவ்வொரு ஜியோ ஓடிடி பாஸ் ரீசார்ஜ் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு மாதம் தோறும் சுமார் ரூ.1,500 மதிப்புள்ள பொழுதுபோக்கு நன்மைகள் கிடைப்பதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பேக்குகளில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சிகள் என அனைத்தும் அடங்கும். இதில் யூடியூப் பிரீமியம் (YouTube Premium) சந்தா கிடைப்பதால் விளம்பரங்கள் இன்றி வீடியோக்களைக் கண்டுகளிக்கலாம். ஜியோஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட் (JioHotstar Mobile + Hollywood) சந்தா மூலம் நேரலை விளையாட்டுகள், ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் மற்றும் பிரபல ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்க்கலாம். ரூ.550 மற்றும் ரூ.2000 திட்டங்களில் அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தாவும், ரூ.200 திட்டத்தில் பிரைம் வீடியோ மொபைல் எடிஷனும் (Prime Video Mobile Edition) வழங்கப்படுகிறது. Sony LIV, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT, FanCode, Hoichoi, Chaupal, Planet Marathi, Kanccha Lannka, TimesPlay, Tarang Plus ஆகிய செயலிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜியோ டிவி (JioTV) ஆப் வழியாக 1,000-க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்களைப் பார்க்கும் வசதியும் உள்ளது. ரீசார்ஜ் செய்வது எப்படி? புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரூ.550 மற்றும் ரூ.2000 ஜியோ ஓடிடி பாஸ் திட்டங்களை வாடிக்கையாளர்கள் கீழ்க்கண்ட வழிகளில் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். மைஜியோ செயலி, ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம், அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஜியோ ரீடெய்ல் கடைகளில் ரீசார்ஜ் செய்யலாம். ஒரே ரீசார்ஜ் திட்டத்தில் அதிக டேட்டா, அன்லிமிடெட் 5G மற்றும் பல பிரீமியம் ஓடிடி சேவைகளைத் தொடர்ந்து பெற விரும்பும் பயனர்களுக்கு இந்தத் திட்டங்கள் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய 'ஜியோ ஓடிடி பாஸ்' (Jio OTT Pass) ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டங்களில் 15 ஓடிடி செயலிகளுக்கான அணுகலுடன், அன்லிமிடெட் 5ஜி வசதியும் வழங்கப்படுகிறது.
ரூ. 200 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 30 ஜிபி டேட்டா கிடைக்கிறது. கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ. 550 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 90 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன் ரூ. 2000 மதிப்பிலான புதிய திட்டத்தையும் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.