PulseNews
தொழில்நுட்பம்

Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.

கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு வாய்மூடி இருக்காமல் கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். Read more

CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், அதிமுகவை அபகரிக்கவோ அழிக்கவோ முயற்சி செய்தால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார். ட்டமன்றத்தில் விஜய்யை பாராட்டிப் பேசும் நிர்வாகிகள், அவர் இந்தியாவின் பிரதமராகவோ அல்லது சர்வதேச அளவில் முக்கியத் தலைவராகவோ வர வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்துவது அவர்களின் விருப்பம். ஆனால், அதிமுகவின் உண்மைத் தொண்டர்களையும் விசுவாசிகளையும் ஏமாற்றி, "நான்தான் எம்.ஜி.ஆர், நான்தான் ஜெயலலிதா, தமிழக வெற்றிக் கழக ஆட்சிதான் அதிமுக ஆட்சி" என்று கூறி அதிமுகவை அபகரிக்கவோ அழிக்கவோ முயற்சித்தால், அது அதிமுகவின் கடைசி தொண்டன் இருக்கும் வரை நடக்காது எனத் தெரிவித்துள்ளார் "ஒருவேளை சமூக வலைதளங்கள் மூலம் அதிமுகவை அழிக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டால், விசுவாசத் தொண்டர்கள் நாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம்; அல்லது நீங்கள் உயிரோடு இருப்பீர்களா என்பது எங்களுக்குத் தெரியாது" என்று பேசியுள்ளார்.

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு

முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், அக்கட்சியின் துணைத் தலைவர் குஷ்புவே தற்போது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவரது பதிவில்
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“ இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட குஷ்பு, தமிழக முதல்வரின் தாயார் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது என்றும், இதுபோன்ற கருத்துக்கள் எந்தவொரு தளத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் கூறியுள்ளார்.

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு:

சென்னையை அடுத்த எண்ணூர் அருகே கடலில் கலக்கும் இடத்திற்கு சற்று முன்பாக கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் அப்பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்கள் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி

தேர்தல் முடிவுக்கு பின் ஒரு துறை அதிகம் ஆக்டிவ் ஆக இருக்கிறது என்றால் அது திமுகவின் சட்டத்துறை தான் என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார். சொல்லி அடித்தது போல் தஞ்சாவூர் செல்வதற்கு முன் நீதிமன்றம் மூலம் கைது நடவடிக்கையை தடுத்தது வழக்கறிஞர் அணி தான். ஜாலியா ட்ரிப் செல்வது போல், ரோடு ஷோ வாக தான் சென்றோம். அரசின் மூலம் எந்த செலவும் இல்லாமல் ரோடு ஷோ நடத்தினோம். தேர்தலுக்கு பிறகு சற்று சோர்ந்து போய் இருந்த நாம் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ளோம். நாளை சட்டமன்றத்தில் என்னென்ன கூத்தடிக்க உள்ளனர் என தெரியவில்லை.

நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்

தேசிய கல்விக் கொள்கை மறு ஆய்வுக் குழுவின் தலைவரும், யுஜிசி முன்னாள் தலைவரும் ஐஐஎம் கல்கத்தாவின் ஆளுநர் குழுத் தலைவருமான ஜெகதீஷ் குமார், நீட், ஜேஇஇ மற்றும் கியூட் போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகள் இந்திய உயர்கல்வியின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
PulseNews சுருக்கம்

இன்றைய வேகமான உலகில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளைப் பார்க்கும் பழக்கம் குறைந்துவிட்டது. மக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை மிக விரைவாகவும் எளிமையாகவும் தெரிந்துகொள்ளவே விரும்புகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, நாட்டில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்வுகளை மட்டும் ஏபிபி நாடு தொகுத்து வழங்குகிறது. இந்தத் தலைப்புச் செய்திகளை மட்டும் படித்தாலே அன்றைய முக்கிய நிகழ்வுகளை உங்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology