Maruti SUV: ரூ.10 லட்சம் பட்ஜெட்டில், 30KM மைலேஜ் எஸ்யுவி ஆன் தி வே - இன்விக்டோவில் விட்டதை பிடிக்க மாருதி தீவிரம்

Upcoming Maruti Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு மாருதி சுசூகி நிறுவனம், பட்ஜெட் விலையில் ஹைப்ரிட் காரை தயார்படுத்தி வருகிறது.

மாருதியின் புதிய ஹைப்ரிட் எஸ்யுவி:

நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி உள்ளூரில் க்ராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோ ஆகிய இரண்டு ஹைப்ரிட் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் இவற்றில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பம் என்பது டொயோட்டா நிறுவனத்திடமிருந்து பகிரப்படுகிறது. அந்த நிலையை தவிர்க்க, மலிவு விலை கார் பயன்பாட்டிற்கான சொந்தமான சீரிஸ் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. டொயோட்டாவுடன் தற்போது பகிரப்படும் தொழில்நுட்பத்தை போன்று இல்லாமல், இந்தத் தொழில்நுட்பம் மாருதியால் தனது ஹைப்ரிட் மாடல்களுக்கு சிறந்த மைலேஜை வழங்கவும், விலையைக் குறைக்கவும் தனிப்பட்ட முறையில் உருவாக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை கொண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதியின் முதல் கார் மாடல் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

மாருதி ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட் - என்ன எதிர்பார்க்கலாம்?

வெளியாகியுள்ள தகவல்களின்படி, கடந்த 2024 முதலே மாருதி ஃப்ராங்க்ஸ் க்ராஸ் ஓவரின் ஹைப்ரிட் எடிஷன் மீது மாருதி பணியாற்றி வருகிறது. ஆனால் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இல்லை. அது எப்போது வந்தாலும், அதில் தற்போதைய டொயோட்டா சீரிஸ்-பாரலல் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் இடம்பெறாது என ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. மாறாக, அது மாருதியின் சொந்த சீரிஸ்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் சந்தைப்படுத்தப்பட உள்ளதாம்.

புதிய HEV-அடிப்படையிலான ஹைப்ரிட் மாடல்கள், தற்போது ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களில் உள்ள 1.2-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் மூன்று-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை (Z12E) பயன்படுத்தும். இந்த இன்ஜின் ஒரு ஜெனரேட்டராகச் செயல்பட்டு, குறைந்த கொள்ளளவு கொண்ட பேட்டரியை சார்ஜ் செய்யும். அந்தப் பேட்டரி, முன் சக்கரங்களை இயக்கும் மோட்டாருக்கு ஆற்றலை வழங்கும் என கூறப்படுகிறது.

சீரிஸ் ஹைப்ரிட் பவர்ட்ரெயின் என்றால் என்ன?

சீரிஸ் ஹைப்ரிட் என்றால் என்ன, அதை உற்பத்தி செய்வது ஏன் மலிவானது? என்பதை எளிமையாகச் சொன்னால், சீரிஸ் ஹைப்ரிட் அமைப்பில் உள்ள பெட்ரோல் இன்ஜின், ஒரு ஜெனரேட்டராக அல்லது பயண தூரத்தை அதிகரிக்கும் கருவியாக மட்டுமே செயல்படுகிறது. அது சக்கரங்களுக்கு நேரடியாக ஆற்றலை வழங்குவதில்லை. மாறாக, சக்கரங்களை இயக்கும் ஒரு மின்சார மோட்டாரை இயக்குவதற்காக அது மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இந்த மோட்டார், ஒரு PHEV-ஐ விட சிறிய பேட்டரி பேக்கிலிருந்து ஆற்றலைப் பெறுகிறது. பயண தூரத்தை அதிகரிக்கும் கருவிகள், குறுகிய தூரப் பயணங்களுக்கு மிகவும் சிறப்பாகச் செயல்படுகின்றன. நீண்ட அல்லது அதிவேகப் பயணங்களின் போது, இன்ஜின் அதிக எரிபொருளைப் பயன்படுத்தக்கூடும்.

ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட்: மைலேஜ்

HEV பவர்ட்ரெய்ன், பெரும்பாலான நேரங்களில் இன்ஜின் மிகவும் எரிபொருள் சிக்கனமான ரெவ் வரம்பில் இயங்கும் வகையில் ட்யூன் செய்யப்படும். எனவே, நிஜ உலகச் சூழல்களில் ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட் லிட்டருக்கு 30 கி.மீ மைலேஜைத் தாண்டுவதில் ஆச்சரியமில்லை என கூறப்படுகிறது. சில மதிப்பீடுகள் இந்த மைலேஜ் லிட்டருக்கு 40 கி.மீ எட்டக்கூடும் என்று கூறுகின்றன, ஆனால் பெட்ரோல்-எத்தனால் கலப்புச் சூழலைக் கருத்தில் கொண்டால், அதிகபட்சம மைலேஜை அடைவது கடினமான ஒன்றாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: Budget SUVs EMI: இந்தியாவில் மிகவும் குறைவான EMI-யில் கிடைக்கும் 10 SUV-க்கள் - விலை, வட்டி, தவணை - முழு விவரம்

ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட் - வெளியீடு எப்போது? விலை

தொடக்கத்தில் ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட் 2025-ஆம் ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து ஏற்படும் தாமதங்களால் காரின் உறுதியான வெளியீட்டு தேதியை குறிப்பிடமுடியவில்லை. பலேனோ ஃபேஸ்லிஃப்ட் அடுத்த மாதம் அறிமுகமாகிறது. அதில் HEV பவர்ட்ரெய்ன் அறிமுகமாவதற்கு ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. ஃப்ராங்க்ஸ் மற்றும் பலேனோவைத் தவிர, ஸ்விஃப்ட் காரும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாம். பலேனோவில் இல்லாவிட்டாலும், 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ ஃப்ராங்க்ஸ் HEV தொழில்நுட்பத்துடன் வரக்கூடும். அப்போது இந்த காரின் விலை ரூ.9.5 லட்சம் முதல் ரூ.13.5 லட்சம் வரை விலை உயர்வை பெறக்கூடும். இது வழக்கமான பெட்ரோல் வேரியண்ட்களை காட்டிலும் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை விலை உயர்வை பெறக்கூடும்.

கைகொடுக்காத இன்விக்டோ

இன்விக்டோ மாடலிலேயே ஹைப்ரிட் ஆப்ஷன் இருந்தாலும், மாருதி கார் மாடலுக்கு 30 லட்சம் என்ற விலை வரம்பை வாடிக்கையாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் தான் விலைக்கு நிகரான அத்தனை அம்சங்களை கொண்டிருந்தாலும், அந்த மாடலின் விற்பனையும் மந்தமாகவே உள்ளது. இந்நிலையில் தான் பட்ஜெட் விலையில் பயனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தனது பலமான ஆயுதத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது மாருதி சுசூகி நிறுவனம்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பட்ஜெட் விலையில் புதிய ஹைப்ரிட் எஸ்யுவி ரக காரை அறிமுகப்படுத்த மாருதி சுசூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ.10 லட்சம் விலையில், லிட்டருக்கு 30 கி.மீ மைலேஜ் வழங்கும் வகையில் இந்தக் கார் உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போது மாருதி நிறுவனம் விற்பனை செய்து வரும் கிராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோ ஆகிய ஹைப்ரிட் கார்களில், டொயோட்டா நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையை மாற்றி, சுயமாக புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் சந்தையில் தனது நிலையை வலுப்படுத்த மாருதி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.