PulseNews
தொழில்நுட்பம்

மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு புதிய அரசு நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து சிரமம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் - கோவளம் இடையே பையனூர், பண்டல்குடி, தையூர், சுண்டவாக்கம் உள்ளிட்ட பல கிராமப் பகுதிகள் அமைந்துள்ளன. அதேபோல் சுமார் 3 கி.மீ இடைவெளியில் உள்ள மாமல்லபுரம் - திருப்போரூர் வழித்தடத்திலும் நேரடி அரசுப் பேருந்து வசதிகள் இல்லாத நிலை நீடிக்கிறது.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்குச் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்கள் நகரப் பகுதிகளுக்குச் செல்ல ஷேர் ஆட்டோக்களையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஒரு நபருக்கு 40 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் பொருளாதாரச் சுமையைச் சந்திக்கின்றனர்.

கூடுதல் நேரடி பேருந்துகளின் தேவை

இதேபோல மாமல்லபுரம் - கடம்பாடி, மணமை, பட்டிபுலம்பொந்தவாக்கம், எஸ்டேட், புலியூர், புலிமேடு ஆகிய பகுதிகள் வழியாக மாமல்லபுரத்தை அடைவதற்கும், மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழித்தடத்தில் வசிப்பவர்களுக்கும் நேரடி பேருந்து வசதிகள் இல்லை. கடம்பாடி, சுண்டவாக்கம் வழியாக திருக்கழுக்குன்றம் செல்லும் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றால், பொதுமக்கள் வெண்பாக்கம் சென்று அங்கு இறங்கி வேறு பேருந்தில்தான் மாற வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் நேரமும் கூடுதல் கட்டணமும் வீணாகிறது.

அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாமல்லபுரத்தில் இருந்து வடகடம்பாக்கம், சுண்டவாக்கம், திருக்கழுக்குன்றம் வழியாக மீண்டும் மாமல்லபுரத்தை அடையும் வட்டாரப் பாதையிலும், மாமல்லபுரம் - திருக்கழுக்குன்றம் வழித்தடத்திலும் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுப் போக்குவரத்து கழகத்திற்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
PulseNews சுருக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு புதிய அரசு நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறது.

மாமல்லபுரம் - கோவளம் இடையே அமைந்துள்ள பையனூர், பண்டல்குடி, தையூர் மற்றும் சுண்டவாக்கம் போன்ற கிராமப் பகுதிகளுக்குப் போதிய பேருந்து வசதி இல்லை. சுமார் 3 கி.மீ இடைவெளியில் உள்ள பகுதிகளுக்கும் போக்குவரத்து சிரமம் நீடிப்பதால், அரசு பேருந்துகளை இயக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology