5 ஸ்டார் ஓட்டல் வசதி; சொகுசு கார் ஆதிக்கத்தை தகர்த்த ஹூவாய் Maextro S800! பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடிக்கு சவால்

இதுவரை சொகுசு கார் சந்தையில் மெர்சிடிஸ்- பென்ஸ் மேபேக், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் ஆடி ஏ8 போன்ற கார்களே ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், தற்போது ஹூவாய் (Huawei) மற்றும் ஜாக் (JAC) நிறுவனங்களின் கூட்டணியில் உருவான Maextro S800 என்ற புதிய கார் அவற்றுக்குக் கடும் சவாலாக உருவெடுத்துள்ளது.

சீனாவில் 1 லட்சம் டாலருக்கும் அதிகமான செடான் கார்கள் பிரிவில், அதிக விற்பனையாகும் காராக இது மாறியுள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, மெர்சிடிஸ் மேபேக் எஸ் கிளாஸ், போர்ஷே பனமேரா, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் போன்ற முன்னணி கார்களின் விற்பனையை இது பின்னுக்குத் தள்ளியுள்ளது.

என்னென்ன வசதிகள்?

ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போன்ற சொகுசான உட்புற அமைப்பை இந்தக் கார் கொண்டுள்ளது. இதில் மூன்று பெரிய ஸ்கிரீன்கள் உள்ளன. பின்பக்கப் பயணிகளுக்கு என தனித்தனி ஸ்கிரீன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நீண்ட தூரப் பயணங்களில் உடல் அசதியைக் குறைக்கும் வகையிலான ஜீரோ கிராவிட்டி சீட்டுகள் மற்றும் தேவைப்படும்போது வெளியே வரும் வகையிலான லேசர் புரொஜெக்ஷன் ஸ்கிரீன் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி மற்றும் ரேஞ்ச்

இந்தக் கார் முழுமையான எலெக்ட்ரிக் மற்றும் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இதன் எலெக்ட்ரிக் மாடலில் உள்ள 97 kWh பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால், சுமார் 700 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும். இதன் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம், வெறும் 10 முதல் 12 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்துவிட முடியும்.

வடிவமைப்பு

இந்தக் கார் 5,480 மி.மீ நீளமும், 3,370 மி.மீ வீல்பேஸும் கொண்டு மிகவும் விசாலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டபுள் மில்லியன் பிக்சல் ஹெட்லைட்டுகள் உள்ளன. மேலும், மிக விலையுயர்ந்த ஹைப்பர் சொகுசு கார்களில் மட்டுமே காணப்படும், கைகளால் பாலிஷ் செய்யப்பட்ட கிரிஸ்டல் ஹெட்லைட் கொண்ட ஒரு மாடலும் இதில் உள்ளது. இதன் பிரத்யேகமான கதவு கைப்பிடிகள் காருக்குப் பிரீமியம் தோற்றத்தைத் தருகின்றன.

இந்தியாவில் எப்போது?

இந்தியாவில் இந்தக் கார் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை இல்லை. சீனாவில் இதன் விலை 7 லட்சம் முதல் 10 லட்சம் யுவான் வரை உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.85 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை இருக்கலாம்.

எனினும் இந்தியாவுக்கு வரும்போது, இறக்குமதி வரி மற்றும் பிற வரிகளால் இதன் விலை இன்னும் அதிகரிக்கலாம். இது இந்தியாவில் அறிமுகமானால், மெர்சிடிஸ் மேபேக் மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்களுடன் நேரடியாகப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் ஆடி ஏ8 போன்ற கார்கள் இதுவரை சொகுசு கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்நிலையில், ஹூவாய் மற்றும் ஜாக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள Maextro S800 கார், அவற்றுக்கு வலுவான போட்டியை அளிக்கும் வகையில் அறிமுகமாகியுள்ளது.
இந்தக் கார் 5 ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனாவில் 1 லட்சம் டாலருக்கும் அதிகமான விலையிலான செடான் ரக கார்கள் பிரிவில், இந்த புதிய கார் அதிக வரவேற்பைப் பெற்று விற்பனையில் முன்னிலை வகிக்கிறது.