PulseNews
தொழில்நுட்பம்

6,500 எம்.ஏ.எச் பேட்டரி, 50 எம்.பி சோனி கேமரா: ஆக.21 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் டெக்னோ போவா 8 ப்ரோ 5ஜி

டெக்னோ நிறுவனம் தனது புதிய 'போவா 8 ப்ரோ 5ஜி' (POVA 8 Pro 5G) ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய நிலையில், இந்த போன் ஆக.21 முதல் முறையாக பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை, அதிரடி வங்கிச் சலுகைகள் மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரங்கள் இதோ: போவா 8 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள் (Specifications) 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. மேலும் 2644 × 1208 பிக்சல்ஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு வசதிகளும் இதில் உள்ளன. ஆக்டாகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்டிமேட் 4nm (MediaTek Dimensity 7400 Ultimate 4nm) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. கேமிங் பயனர்களுக்காக மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. HiOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் இந்த போன் இயங்குகிறது. இதற்கான ஆண்ட்ராய்டு மற்றும் பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும். 12ஜிபி வரை ரேம், 512ஜிபி வரை ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. பின்புறத்தில் 50MP Sony LYTIA 700c மெயின் கேமரா + 8MP அல்ட்ரா வைடு கேமரா அடங்கிய டூயல் கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ கால்களுக்காக 13MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. போனின் பின்புறத்தில் 'அலைவ் ​​மேட்ரிக்ஸ் டிஸ்பிளே' (Alive Matrix Display) வசதி உள்ளது. இதன் மூலம் பேட்டரி அளவு, டைமர்கள், நோட்டிபிகேஷன் மற்றும் ஸ்பேம் அழைப்புகளை எளிதாகக் காண முடியும். நீண்ட நேரம் உழைக்கக்கூடிய 6500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் IP68, IP69 மற்றும் IP69K தர சான்றிதழ் பெற்ற டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் வருகிறது. அத்துடன் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) ராணுவ தர சான்றிதழையும் பெற்றது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் மைக்ரோபோன், 5ஜி, டூயல் 4ஜி VoLTE, வைஃபை 802.11 ac, புளூடூத் 5.4, என்எப்சி, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS) மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை உள்ளன. ஆர்க் ஒயிட் (Arc White), கிராஃபைட் பிளாக் (Graphite Black) மற்றும் கிரீன் (Green) ஆகிய 3 கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கிறது. 8ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட்: ரூ.49,999 12ஜிபி ரேம் + 512ஜிபி வேரியண்ட்: ரூ.54,999 தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும்போது ரூ.3,000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகையின் மூலம் ஆரம்ப மாடலை ரூ.46,999 விலையிலேயே வாங்கிவிட முடியும்.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
6,500 எம்.ஏ.எச் பேட்டரி, 50 எம்.பி சோனி கேமரா: ஆக.21 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் டெக்னோ போவா 8 ப்ரோ 5ஜி
PulseNews சுருக்கம்

டெக்னோ நிறுவனம் தனது புதிய 'போவா 8 ப்ரோ 5ஜி' ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் 6,500 எம்.ஏ.எச் பேட்டரி மற்றும் 50 எம்.பி சோனி கேமரா ஆகியவை முக்கிய சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology