PulseNews
தொழில்நுட்பம்

தலைமைச் செயலகத்தில் டெஸ்ட் டிரைவ்: மஹிந்திரா ஸ்கார்பியோ, பொலிரோ டெஸ்ட் டிரைவ்; எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த கார் கிடைக்கும்?

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்ள அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முதற்கட்டமாக முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவின் 6 வகையான மாடல் கார்கள் சென்னை தலைமைச் செயலகத்திற்குப் பரிசோதனை ஓட்டத்திற்காகக் (Test Drive) கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 12-ம் தேதியன்று சட்டசபையில் பேசிய காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. ஜோதிமணி, எந்தவிதப் பொருளாதார பலமும் இல்லாமல் எம்.எல்.ஏ.-வாகப் பணியாற்றுபவர்கள் தொகுதிப் பணிகளைச் செய்ய சொந்த வாகனங்களோ அல்லது உதவியாளர்களையோ வைத்துக்கொள்ள முடிவதில்லை என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, தமிழகத்தின் 234 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனங்கள் வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறியவும், அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதைக் கண்காணிக்கவும் தொடர்ந்து தொகுதி முழுவதும் பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொருளாதார பலமில்லாமல் பணியாற்றும் உறுப்பினர்கள் மற்றும் முதன்முறையாகத் தேர்வான உறுப்பினர்கள் மக்கள் பணியைத் தொய்வின்றி தொடர ஏதுவாக, அனைத்து எம்.எல்.ஏ.-க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்றார். இந்த அறிவிப்பு, எம்.எல்.ஏ.-க்கள் தங்கள் பயணத் தேவைகளுக்காகப் பிறரைச் சார்ந்திருப்பதைத் தடுத்து, எவ்வித சமரசமும் இன்றி கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு எளிதாக பயணம் செய்து மக்களின் குறைகளைத் தீர்க்க வழிவகுக்கும். வாகனத்தை முறையாக பராமரிக்க ஓட்டுநர், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாகவும், அலுவலகப் பணிகளுக்காக ஒரு உதவியாளரை நியமிக்க மாதந்தோறும் ரூ.25,000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும். இதற்காக உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும். முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து பேரவையில் பேசிய சில உறுப்பினர்கள், நீண்டதூரப் பயணங்களுக்கும் பாதுகாப்புக்கும் ஏதுவாக ‘டொயோட்டா இன்னோவா’ ரகக் கார்களை வழங்கினால் சிறப்பாக இருக்கும் எனக் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், பல்வேறு மாடல்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் சூழலில், இன்று மஹிந்திரா நிறுவனத்தின் 6 மாடல் கார்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்தன. அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பார்வைக்காகவும், டெஸ்ட் டிரைவிற்காகவும் அவை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. பரிசீலனையில் உள்ள முக்கிய கார்களின் விவரங்கள்: Mahindra Scorpio-N: புகழ்பெற்ற ஸ்கார்பியோவின் அப்டேட் மாடலான இதன் விலை ₹17.23 லட்சம் முதல் டாப் வேரியண்ட் ரூ.32.28 லட்சம் வரை உள்ளது. பெட்ரோல், டீசல் என 2 என்ஜின் தேர்வுகள் (2.0L டர்போ பெட்ரோல், 2.2L டர்போ டீசல்), மேனுவல் / ஆட்டோமேட்டிக் மற்றும் 6 சீட்டர், 7 சீட்டர் அமைப்புகளில் மொத்தம் 31 வேரியண்ட்களில் கிடைக்கிறது. Mahindra XUV 7XO: 1997 cc பெட்ரோல் மற்றும் 2184 cc டீசல் என்ஜின் தேர்வுகளுடன் மேனுவல் / ஆட்டோமேட்டிக் வசதிகளுடன் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை ரூ.17.60 லட்சம், டாப் வேரியண்ட் விலை ₹32.65 லட்சம். இதில் மொத்தம் 44 வேரியண்ட்கள் உள்ளன. Mahindra Bolero / Bolero Neo: 1493 cc என்ஜின் கொண்ட பொலிரோ காரின் அடிப்படை வேரியண்ட் ரூ.8.49 லட்சம் முதல் டாப் வேரியண்ட் ரூ.11.90 லட்சம் வரை உள்ளது. இதில் மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளன. இவை தவிர மேலும் சில கார்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. கார்களின் மைலேஜ், பாதுகாப்பு வசதிகள், பராமரிப்புச் செலவுகள், மக்கள் பிரதிநிதிகளின் சொகுசுப் பயணம் ஆகியவற்றைக் கணக்கிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், இறுதி செய்யப்படும் கார் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தலைமைச் செயலகத்தில் டெஸ்ட் டிரைவ்: மஹிந்திரா ஸ்கார்பியோ, பொலிரோ டெஸ்ட் டிரைவ்; எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த கார் கிடைக்கும்?
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தடையின்றி தங்கள் தொகுதிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மஹிந்திரா நிறுவனத்தின் 6 வகையான மாடல் கார்கள் சோதனை ஓட்டத்திற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கிடையே, கடந்த 12-ம் தேதி சட்டப்பேரவையில் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. ஜோத... (மீதமுள்ள தகவல்கள் இல்லை) இது தொடர்பாகப் பேசியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology