PulseNews
தொழில்நுட்பம்

இந்தியாவின் WagonR? 310 கி.மீ. ரேஞ்ச்- சுஸுகியின் மினி எலெக்ட்ரிக் கார் அறிமுகம்- என்ன விலை?

தற்போது எலக்ட்ரிக் கார் சந்தையானது பெரிய மற்றும் விலையுயர்ந்த வாகனங்கள் என்ற நிலையைத் தாண்டி, சிறிய, மலிவான மற்றும் எளிதாக ஓட்டக்கூடிய எலெக்ட்ரிக் கார்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

நானோ கார் சைஸில்...

இதன் ஒரு பகுதியாக, சுஸுகி நிறுவனம் தனது புதிய சிறிய எலெக்ட்ரிக் காரான சுஸுகி இ-ஸ்கை (Suzuki e-Sky) மாடலை ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளது. நெருக்கடியான நகரச் சாலைகளில் எளிதாக ஓட்டிச் செல்லவும், பார்க்கிங் செய்வதை எளிதாக்கவும் இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட டாடா நானோ காரின் அளவை ஒத்திருக்கும் இந்த கார், 3,395 மி.மீ நீளமும், 1,475 மி.மீ அகலமும், 1,625 மி.மீ உயரமும் கொண்டது. இதன் டர்னிங் ரேடியஸ் வெறும் 4.4 மீட்டர் என்பதால், குறுகலான வீதிகளிலும் எளிதாகத் திருப்பலாம். காரின் வெளிப்புறம் சிறியதாக இருந்தாலும், இதன் பாக்ஸி டிசைன் மற்றும் உயரமான ரூஃப்லைன் காரணமாக உட்புற கேபினில் அதிக இடவசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடை எவ்வளவு?

செவ்வக வடிவ எல்.இ.டி ஹெட்லைட்டுகள், C-வடிவ டி.ஆர்.எல்கள், ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் டூயல்-டோன் ஃபினிஷ் ஆகியவை இதன் முக்கிய வடிவமைப்பு அம்சங்களாகும். இதன் எடை சுமார் 1,030 கிலோவாகும்.

310 கி.மீ ரேஞ்ச்

இந்த சிறிய கார் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 310 கி.மீ ரேஞ்ச் வழங்கும் என சுஸுகி நிறுவனம் கூறுகிறது. இதில் உள்ள அதிக திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் சிறந்த ரேஞ்ச் கிடைக்க உதவுகிறது. மேலும், குளிர்பிரதேச வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் வகையில் டைரக்ட் ஹீட் பம்ப் மற்றும் ஏர் ஹீட்டட் எலெக்ட்ரிக் ஹீட்டர் வசதி உள்ளது. இதனால் குளிர் காலங்களில் கேபினை வெப்பமாக்க அதிக பேட்டரி செலவாகாது என்பதால் ரேஞ்ச் பாதிக்கப்படாது.

பேட்டரியின் பிற பயன்பாடுகள்

இதில் V2L தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காரின் பேட்டரியைப் பயன்படுத்தி மடிக்கணினியை சார்ஜ் செய்யலாம். கேம்பிங் செல்லும்போது இன்டக்‌ஷன் அடுப்பு அல்லது வாட்டர் ஹீட்டரை இயக்கலாம். மின்தடை ஏற்படும் போது அவசரகால மின் ஆதாரமாகவும் சிறிது நேரம் பயன்படுத்தலாம்.

விற்பனை எப்போது?

வரும் 2027 மார்ச் மாதத்திற்குள் ஜப்பானிய சந்தையில் சுஸுகி இ-ஸ்கை விற்பனைக்கு வரும். இதன் விலை விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், விலையை மலிவாக நிர்ணயிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இந்தியாவின் WagonR? 310 கி.மீ. ரேஞ்ச்- சுஸுகியின் மினி எலெக்ட்ரிக் கார் அறிமுகம்- என்ன விலை?
PulseNews சுருக்கம்

பெரிய மற்றும் விலையுயர்ந்த வாகனங்கள் என்ற நிலையிலிருந்து மாறி, தற்போது சிறிய மற்றும் மலிவான எலக்ட்ரிக் கார்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கேற்ப, சுஸுகி நிறுவனம் தனது புதிய 'இ-ஸ்கை' (e-Sky) எனும் மினி எலக்ட்ரிக் காரை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது.

டாடா நானோ கார் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், நெரிசலான நகரச் சாலைகளில் எளிதாக ஓட்டுவதற்கும், வாகனத்தை நிறுத்துவதற்கும் வசதியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 310 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய இந்த காரின் விலை குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology