MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழக அரசு அறிவித்த குறுவை சிறப்புத்தொகுப்பு இன்னும் விவசாயிகளை சென்று சேராமல் இர்ய்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறுவை சிறப்புத்தொகுப்பு திட்டம்

குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தாமதமானதாலும், வழக்கமான தேதியில் மேட்டூர் அணையும் திறக்கப்படவில்லை. இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க மற்றும் நெல் சாகுபடியை ஊக்குவிக்க அவசர கால சிறப்பு தொகுப்பை அறிவித்தார்.

ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்காக ரூ.4,000 வரை மானியம் வழங்கப்பட்டது. வடிமுனைக் குழாய்களைக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக ரூ.77.50 கோடி நிதி ஒதுக்கீடும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ரூ.57.33 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. மேலும் சான்று பெற்ற நெல் விதைகள், உரங்கல், பாசன உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் எழுந்தபோது முதலமைச்சர் விஜய் விளக்கமளித்தார்.

இந்நிலையில் குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது - விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன். வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார். ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை.

இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும்.விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல.

குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழக அரசு அறிவித்த குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் இன்னும் விவசாயிகளைச் சென்றடையவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதில் காட்டும் ஆர்வத்தை, விவசாயிகளின் நலனிலும் அரசு காட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேட்டூர் அணை திறப்பு மற்றும் தென்மேற்கு பருவமழை தாமதமான சூழலில், இந்தத் தொகுப்பு விவசாயிகளுக்குச் சேராதது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.