PulseNews
தொழில்நுட்பம்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய கார்: அரசியல் கட்சிகளின் ஆதரவும் மறுப்பும் - ஒரு பார்வை

வி.சி.க எம்.எல்.ஏ ஜோதிமணி தான் சட்டப்பேரவைக்கு 280 கி.மீ தொலைவில் இருந்து வாடகை காரில் வருவதாகவும் வாடை தரும் அளவுக்கு வசதி இல்லை என்றும் தொகுதிய்ல் மக்களைச் சந்தித்து மக்கள் பணி செய்ய வாகன வசதி இல்லை என்றும் ஊதியம் கொடுத்த் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள வசதி இல்லை என்றும் அதனால், வாகன வசதி செய்து தர வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு செலவில் வாகனங்கள் (கார்) வழங்கப்படும் என்றும், வாகனப் பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75,000 மற்றும் உதவியாளர் படி ரூ.25,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பால் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த மாதாந்திர ஊதியம் மற்றும் படிகள் ரூ.1.05 லட்சத்தில் இருந்து ரூ.1.80 லட்சமாக உயர்கிறது. எளிய பின்னணியில் இருந்து முதன்முறையாக வந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதிப் பணிகளைச் சுதந்திரமாகவும், லஞ்ச ஊழலின்றியும் மேற்கொள்ளவே இத்திட்டம் கொண்டுவரப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு பேரவையில் கடும் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கார் வேண்டும் என்று ஆதரவும் கார் வேண்டாம் என்று மறுப்பும் கலந்த மாறுபட்ட கருத்துகள் உருவாகியுள்ளன. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் விவாதங்கள்: தி.மு.க (எதிர்க்கட்சி): முதலமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று (21.08.2026) சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில அரசின் கடும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, தி.மு.க-வைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த அரசுக் கார்களைப் பெற மாட்டார்கள் எனத் திட்டவட்டமாக அறிவித்தார். வசதியற்ற, பொருளாதாரத்தில் நலிவடைந்த எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும் கார் வழங்கினால் போதுமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழக வெற்றிக் கழகம் (ஆளும் கட்சி): அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ஷாஜகான் ஆகியோர் அரசின் முடிவை நியாயப்படுத்திப் பேசினர். கார் என்பது ஆடம்பரம் அல்ல, அது மக்கள் பணி செய்வதற்கான தேவை என்று குறிப்பிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஏற்கனவே சொந்தமாகக் கார் வைத்திருக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இந்த அரசு காரை கேட்கப்போவதில்லை என்றும் விளக்கமளித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ): சி.பி.ஐ சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன், தங்களுக்கு அரசு கார் தேவையில்லை என்பதே கட்சியின் நிலைப்பாடு என்றும், கார் இல்லாத மற்ற உறுப்பினர்களுக்கு அரசு வழங்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்): சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், ஏற்கனவே சொந்தமாகப் பல கார்கள் வைத்திருக்கும் உறுப்பினர்களுக்கு அரசு செலவில் கார் வழங்குவது ஏற்புடையதல்ல என்றும், வசதியற்ற உறுப்பினர்களுக்குக் கடன் உதவி வழங்கலாமே தவிர நேரடியாகக் கார் வழங்குவதை ஏற்க முடியாது எனக்கூறி அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினார். பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க): பா.ம.க உறுப்பினர் ஏ. கணேஷ்குமார் இத்திட்டத்தை வரவேற்றதோடு, மக்கள் பணியாற்றக் கார் அவசியம் என்றும், தங்களது கட்சியிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உறுப்பினர்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். எனினும், வசதியில்லாத உறுப்பினர்களுக்கு மட்டும் கார் வழங்கினால் போதுமானது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், தொகுதி மக்களுக்குச் தடையின்றி பணியாற்ற கார் அவசியம் என்று ஆளும் தரப்பு வாதிட்டாலும், அரசு நிதியைச் சிக்கனமாகப் பயன்படுத்த வசதியற்ற உறுப்பினர்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலுவாக முன்வைத்து வருகின்றன.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய கார்: அரசியல் கட்சிகளின் ஆதரவும் மறுப்பும் - ஒரு பார்வை
PulseNews சுருக்கம்

சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து அரசியல் கட்சிகளிடையே ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன. சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தனது தொகுதி மக்கள் பணிக்குச் செல்ல போதிய வாகன வசதி இல்லை என்றும், வாடகை காரிலேயே பயணம் செய்வதாகவும், உதவியாளரை நியமிக்கக்கூட போதிய ஊதியம் இல்லை என்றும் கூறி, அரசு வாகன வசதி செய்து தர முதலமைச்சர் ச. ஜோசப் விஜயிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு செலவில் வாகனங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இக்கோரிக்கை மற்றும் அரசு முடிவின் மீதான விவாதங்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology