முத்துராஜவெலயில் 3 புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள் : கிடைத்தது அனுமதி
முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கை பெட்ரோலிய மொத்த சேமிப்பு முனைய நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளையும் 10,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட மற்றொரு எரிபொருள் சேமிப்புத் தொட்டியையும் அமைப்பதற்காக 2025 ஜூன் 2 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்ப...

முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை அமைப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு ஜூன் 2, 2025 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி கிடைத்துள்ளது.
இலங்கை பெட்ரோலிய மொத்த சேமிப்பு முனைய நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்தத் தொட்டிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதில் தலா 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு தொட்டிகளும், 10,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டியும் அமைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.