PulseNews
தொழில்நுட்பம்

'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ ?

இன்று சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தனித் தீர்மானத்தை கொண்டுவந்திருக்கிறது. ஆனால், அவர் முதல்வர் ஆவதற்கு முன்னர், அதாவது கடந்த மார்ச் மாதத்தில் அரியலூரில் செயல்படும் கோகிலாம்பாள் கல்வி நிறுவனத்திற்கு 20 கோடி ரூபாய் தனிப்பட்ட கடனாக கொடுத்துள்ளதாக அவரது பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு வித்திட்ட நிலையில், நீட் எதிர்ப்பு தீர்மானம் பேரவையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சூழலில் இது குறித்து முதல்வர் விஜய் விளக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எழுந்துள்ளன.

ஆகஸ்ட் 15 கிராமசபைக் கூட்டங்களில் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்த, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் மக்கள் ஆதரவோடு வலுவான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிர திட்டம் - டிடிவி தினகரன் விமர்சனம்

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் பேசுகையில், அரசு மருத்துவமனையில் பிரசவங்களை அதிகரிக்கும் வகையில் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த பேச்சுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்; அசால்ட்டா இருக்காதீங்க என சுகாதாரத் துறை எச்சரிக்கை

பருவமழையால் தமிழகத்தில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல். பருவமழை எதிரொலியால் தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. குறையாத காய்ச்சல், வயிற்று வலி, முதுகு வலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற பொது சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!

விழுப்புரம்: விழுப்புரத்தில் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்ற மனைவி மீது ஆசிட் வீசிவிட்டுத் தப்பியோடிய கணவரை நகரக் காவல் நிலையப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு இன்று கைது செய்தனர். இச்சம்பவத்தில் அருகில் நடந்து சென்ற முதியவர் ஒருவரும் காயமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
PulseNews சுருக்கம்

இன்றைய வேகமான டிஜிட்டல் சூழலில், செய்தித்தாள்களை வாசிக்கும் அல்லது தொலைக்காட்சிகளில் செய்திகளை பார்க்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது. நேரமின்மை காரணமாக, மிக முக்கியமான தகவல்களை மிக விரைவாக அறிந்துகொள்ளவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, ஏபிபி நாடு தளம் அன்றைய முக்கியச் செய்திகளை மட்டும் தொகுத்துச் சுருக்கமாக வழங்குகிறது. இந்தப் பகுதியில் உள்ள செய்திகளைப் படித்தாலே, நாட்டில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்வுகளைத் தவறவிடாமல் தெரிந்துகொள்ள முடியும்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology