PulseNews
தொழில்நுட்பம்

டிஜிட்டல் நோமட்ஸ் சொர்க்கம்: 730 நாட்கள் தாராளமாக தங்கலாம்... ஐரோப்பாவில் முதலிடம் பிடித்த குட்டி நாடு; பிரான்ஸ் பக்கம் போய்டாதீங்க

தொழில்நுட்ப வளர்ச்சியால் 'லேப்டாப் இருக்கும் இடமே எனது அலுவலகம்' என்ற வகையில், உலகெங்கிலும் பயணம் செய்து கொண்டே பணிபுரியும் 'டிஜிட்டல் நோமட்களுக்கு' (Digital Nomads - தொலைதூரப் பணியாளர்கள்) ஏற்ற சிறந்த ஐரோப்பிய நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியால இல்ல; இது ஆஸ்திரேலியா... வெளிநாட்டில் இயங்கும் தமிழ்நாட்டுக்கு தெரியாத 'மினி இந்தியா' 'எல்.ஈ.ஐ ரெஜிஸ்டர்' (LEI Register) என்ற உலகளாவிய அமைப்பு, ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள 40 நாடுகளில் வீடு வாடகை, மளிகைப் பொருட்களின் விலை, வைஃபை (Wi-Fi) வேகம், இணை வேலை இடங்கள் (Co-working spaces), பாதுகாப்பு மற்றும் விசா விதிகள் உள்ளிட்ட 19 முக்கியக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. எஸ்டோனியா குறைந்த வாழ்க்கைச் செலவு, சிறந்த உள்கட்டமைப்பு காரணமாக எஸ்டோனியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கு நகர மையத்தில் ஒரு படுக்கையறை வீட்டின் சராசரி வாடகை மாதம் 573 யூரோ, இந்திய மதிப்பில் சுமார் ரூ.52,000 மட்டுமே. மளிகைப் பொருட்கள் செலவு 247.80 யூரோ. அதிவேக இன்டர்நெட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட இங்கு, 1 ஆண்டு செல்லுபடியாகும் 'டிஜிட்டல் நோமட் விசா' கட்டணம் வெறும் 85 யூரோ மட்டுமே. ஐஸ்லாந்து வாடகை மிக அதிகம் (€2,098) என்றபோதிலும், மிக அதிவேக இன்டர்நெட் சேவை, அதிக அளவிலான இணை வேலை இடங்கள் (Co-working) இடங்கள் மற்றும் தங்குமிட வசதிகளால் ஐஸ்லாந்து 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. போர்ச்சுகல் டிஜிட்டல் நோமட்களின் நீண்டகால விருப்பமான போர்ச்சுகல் 3-வது இடத்தில் உள்ளது. இங்கு விசா கட்டணம் 80 யூரோ ஆகும். ஆங்கிலப் பேச்சுத் திறன் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு இங்குள்ள மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகும். மொண்டெனேக்ரோ இங்கு விசா கட்டணம் வெறும் 26 யூரோ மட்டுமே. மேலும், ஐரோப்பாவிலேயே அதிகபட்சமாக 730 நாட்கள் (2 ஆண்டுகள்) வரை இங்குத் தங்க விசா வழங்கப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் பயணிப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த தேர்வாகும். குரோஷியா 540 நாட்கள் வரை விசா வழங்கும் குரோஷியா 5-வது இடத்தில் உள்ளது. இங்குப் பாதுகாப்பு அதிகம் என்றாலும், இன்டர்நெட் வேகம் சற்றே குறைவாக உள்ளது. இப்பட்டியலில் ஸ்லோவேனியா, செக்கியா, ஸ்பெயின், லிதுவேனியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. டிஜிட்டல் நோமட்கள் தவிர்க்க வேண்டிய நாடுகள் அயர்லாந்து இப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. அதிக வாடகை, குறைவான பாதுகாப்பு மற்றும் மிக முக்கியமாக 'டிஜிட்டல் நோமட்களுக்கு' எனத் தனி விசா வசதி இல்லாததே இதற்குக் காரணமாகும். சுவிட்சர்லாந்து 2-வது கடைசி இடத்தில் உள்ளது. இங்கும் தனி விசா வசதி இல்லை; தவிர வாடகை மற்றும் மளிகைப் பொருட்களின் செலவு மிக அதிகம். பெலாரஸ் & போஸ்னியா- ஹெர்ஸகோவினா இந்த இரு நாடுகளிலும் வாழ்க்கை செலவு குறைவு என்றாலும், போதிய உள்கட்டமைப்பு மற்றும் விசா வசதிகள் இல்லை. பிரான்ஸ் உலகின் முன்னணி சுற்றுலாத் தலமாக இருந்தாலும், டிஜிட்டல் நோமட்களுக்கு ஏற்ற விசா இல்லாதது, குறைவான ஆங்கிலப் பேச்சுத் திறன் மற்றும் மோசமான பாதுகாப்புக் குறியீடு காரணமாகக் கடைசி 5 இடங்களுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டிஜிட்டல் நோமட்ஸ் சொர்க்கம்: 730 நாட்கள் தாராளமாக தங்கலாம்... ஐரோப்பாவில் முதலிடம் பிடித்த குட்டி நாடு; பிரான்ஸ் பக்கம் போய்டாதீங்க
PulseNews சுருக்கம்

உலகெங்கிலும் பயணம் செய்துகொண்டே பணிபுரியும் 'டிஜிட்டல் நோமட்ஸ்' எனப்படும் தொலைதூரப் பணியாளர்களுக்கு ஏற்ற சிறந்த ஐரோப்பிய நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்.ஈ.ஐ ரெஜிஸ்டர் (LEI Register) என்ற அமைப்பு, ஐரோப்பாவில் உள்ள 40 நாடுகளில் வீடு வாடகை, மளிகை பொருட்கள் விலை மற்றும் வைஃபை வசதி போன்ற அம்சங்களை ஆய்வு செய்து இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளது.

இதில் ஒரு சிறிய நாடு முதலிடம் பிடித்துள்ளது. அந்த நாட்டில் டிஜிட்டல் நோமட்கள் 730 நாட்கள் வரை தாராளமாகத் தங்கிப் பணிபுரியும் வசதி செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் போன்ற நாடுகளை விட இந்தச் சிறிய நாடு அதிக வசதிகளை வழங்குவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology