IND vs SL: 500 ரன்களை கடந்து ரன் மழை.. இலங்கைக்கு எதிராக இந்திய அணி சம்பவம்!
SL vs IND 2nd Test Day 2 Stumps: 2026 ஆகஸ்ட் 24ம் தேதியான இன்று இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸை 503/9 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், மழை காரணமாக ஆட்டம் பலமுறை தடைபட்டது. தேவ்தத் படிக்கலின் (117) சதத்தின் உதவியால், இந்தியா முதல் நாளில் 300 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாளில், துருவ் ஜூரல் 177 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 9 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் 115 ரன்கள் எடுத்தார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக பலமுறை பாதிக்கப்பட்டது. ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
முந்தைய நாளில் தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அணியை வலுப்படுத்திய நிலையில், இரண்டாம் நாளில் துருவ் ஜூரல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 177 பந்துகளை எதிர்கொண்டு, 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.