PulseNews
விளையாட்டு

சி.எஸ்.கே பயிற்சியாளர் தேடல்... 'இவர்தான் பொருத்தமான ஆள்': சொல்லும் ஹைடன்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியின் தலைமப் பயிற்சியாளராக 18 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டீபன் ஃபிளமிங் பதவி விலகினார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளமிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சி.எஸ்.கே அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளரை தீவிரமாக தேடி வருகிறது. முதலில் ஹேமங் பதானி சிஎஸ்கே பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக பேச்சுகள் எழுந்தன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் இதேபோல், இயன் மோர்க, மைக் ஹசி, பிரண்டன் மெக்கல்லம், ஆடம் வோஜஸ், மோர்னே மோர்க்கல், அபினவ் முகுந்த் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபட்டன. ஆனால் சி.எஸ்.கே நிர்வாகம் எந்தவித தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் வழிகாட்டியுமான தினேஷ் கார்த்திக், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகச் சரியான பயிற்சியாளராக இருப்பார் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஜியோ-ஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் பேசியபோது, "இந்த விஷயத்தில் அணி நிர்வாகம் சரியான முடிவை எடுக்கும் என்று நான் பெரிதும் நம்புகிறேன். எம்.எஸ். தோனியுடன் இணைந்து 'ஃப்ளெமோ' (ஸ்டீபன் ஃப்ளெமிங்) மிகச் சிறப்பாகப் பணியாற்றினார்; அதுவே சி.எஸ்.கே (CSK) அணியின் மிக வலிமையான சக்தியாகத் திகழ்ந்தது. பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன; அவற்றில் ஒன்று தினேஷ் கார்த்திக். அத்தகைய பொறுப்பை ஏற்க அவர் தயாராக இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒரு உள்ளூர் பயிற்சியாளர் இருப்பது முக்கியம் என்று நான் கருதுகிறேன். பல அணிகள் சர்வதேச பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதை நான் அறிவேன்; ஆனால் சி.எஸ்.கே போன்ற பெரிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் ஒரு உள்ளூர் அம்சம், குறிப்பாக 'சென்னை' சார்ந்த ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன். அதனால்தான் தினேஷ் இதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று நினைத்தேன்," என்று மேத்யூ ஹைடன் கூறினார். மேலும் அவர் பேசுகையில், "உள்ளூரைச் சாராத ஆதரவுப் பணியாளர்களைக் கொண்டிருப்பதில் நிச்சயமாக எந்தத் தடையும் இல்லை; ஆனால் இது ஒரு மிகப்பெரிய மாற்றம். எம்.எஸ். (தோனி) மற்றும் ஃப்ளெம் (ஸ்டீபன் ஃப்ளெமிங்) ஆகியோரின் அந்தப் பயணமும் செயல்பாடும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. மும்பை (இந்தியன்ஸ்) அணியைப் போலவே சம எண்ணிக்கையிலான பட்டங்களை வென்று, பெரும் வெற்றியைப் பதிவு செய்து, ஒரு சிறந்த பாரம்பரியத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இருப்பினும், இது ஒரு துணிச்சலான மற்றும் நல்லதொரு நடவடிக்கையாகும்; இந்தப் பொறுப்பை யார் ஏற்கப்போகிறார்கள் என்பதைப் பார்க்க நான் ஆவலாக உள்ளேன்," என்று மேத்யூ ஹைடன் கூறினார். இந்த மாதத் தொடக்கத்தில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இணையக்கூடும் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்து இருந்தார். இது பற்றி அவர் தனது யூடியூப் நிகழ்ச்சியான 'ஆஷ் கி பாத்' (Ash ki Baat)-இல் பேசுகையில், "இயன் மோர்கன் வரக்கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரது பெயர் வலுவாக அடிபடுகிறது. ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதில் சந்தேகமே இல்லை. இதில் இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன: இயன் மோர்கன் இந்த ஆண்டே பொறுப்பை ஏற்பாரா? அல்லது 'மினி ஏலத்தின்' (mini-auction) போது வேறொருவர் அணியை உருவாக்க, அவர் பின்னர் பொறுப்பை ஏற்பாரா?" என்று கூறியிருந்தார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சி.எஸ்.கே பயிற்சியாளர் தேடல்... 'இவர்தான் பொருத்தமான ஆள்': சொல்லும் ஹைடன்
PulseNews சுருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக 18 ஆண்டுகளாகப் பணியாற்றிய ஸ்டீபன் ஃபிளமிங், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதையடுத்து அப்பதவியிலிருந்து விலகியுள்ளார். இதனால், அந்த அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

முதலில் ஹேமங் பதானி பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனப் பேச்சுக்கள் எழுந்தன. இதற்கிடையில், சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்பது குறித்து மேத்யூ ஹைடன் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports