IPL 2027: ஹர்திக் பாண்ட்யாவை கொடுத்த மறுக்கும் மும்பை? விடாது ஆர்வம் காட்டும் கொல்கத்தா!
Hardik Pandya Trade Deal: ஹர்திக் பாண்ட்யா வேகமாகப் பந்துவீசவும், அதிரடியாக பேட்டிங் செய்யவும் தெரிந்த சிறப்பு வாய்ந்த வீரர். அவரது கேப்டன்சியின் கீழ், குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. இருப்பினும், மும்பைக்குத் திரும்பிய பிறகு, அவரது செயல்பாடு எதிர்பார்த்தபடி அமையவில்லை.

வேகப்பந்து வீச்சு மற்றும் அதிரடி பேட்டிங்கில் சிறந்து விளங்கும் ஹர்திக் பாண்ட்யா, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது அந்த அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. திறமையான வீரராக இருந்தாலும், மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய பிறகு அவரது ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக இல்லை.
இந்த சூழலில், 2027 ஐபிஎல் தொடருக்காக ஹர்திக் பாண்ட்யாவை தங்கள் அணியில் சேர்க்க கொல்கத்தா அணி ஆர்வம் காட்டி வருகிறது. இருப்பினும், அவரை விடுவிக்க மும்பை அணி தயாராக இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.