IPL 2027: சிஎஸ்கேவின் அடுத்த பயிற்சியாளர் இவரா? மெக்கல்லத்தை வரவைக்க திட்டம்போடும் எம்.எஸ்.தோனி..!
Chennai Super Kings Head Coach: பிரண்டன் மெக்கல்லம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக வரலாம் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கை நியமிப்பதில் மெக்கல்லம் உதவினார். சிஎஸ்கே-வின் தலைமைப் பயிற்சியாளராகும் மெக்கல்லமின் முயற்சிக்கு ஃபிளெமிங் தற்போது உதவி வருகிறார்.

ஐபிஎல் 2027 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.எஸ். தோனி இவரை அணியில் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளெமிங்கை நியமித்ததில் மெக்கல்லம் முக்கிய பங்காற்றினார். தற்போது, சிஎஸ்கே பயிற்சியாளர் பதவியை மெக்கல்லம் ஏற்பதற்கு ஃபிளெமிங் தனது ஆதரவையும் உதவியையும் வழங்கி வருகிறார்.