PulseNews
விளையாட்டு

விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு முழுவதும் உள்ள விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது. மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் இப்போட்டிகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவ்வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி மாவட்ட அளவில் தொடங்கப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி

இப்போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் tncmtrophy.sdat.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து பதிவு செய்து கொள்ளலாம். இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய வரும் ஆகஸ்ட் 31, 2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தனிநபராகவோ அல்லது தங்களது பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலமாகவோ பதிவுகளை மேற்கொாள்ளலாம்.

புதிய விளையாட்டுப் பிரிவுகள் அறிமுகம்

கடந்த ஆண்டு 38 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல் கூடுதலாக வில்வித்தை, வுஷூ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், கயாக்யிங் (Kayaking) மற்றும் கேனோயிங் (Canoeing) ஆகிய நீர்விளையாட்டுகள் என புதிதாக 8 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறவுள்ளன.

பங்கேற்பதற்கான வயது வரம்பு விவரங்கள்

இப்போட்டிகள் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவர் பிரிவில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதிற்குட்பட்ட மாணவர்களும் (01.01.2008 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்), கல்லூரி பிரிவில் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களும் (01.07.2001 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்) பங்கேற்கலாம். மேலும் 15 முதல் 35 வயது வரை உள்ள பொதுப் பிரிவினர், அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளும் இதில் கலந்து கொள்ளத் தகுதியுடையவர்கள் ஆவர்.

பரிசுத் தொகை விவரங்கள்

மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3,000, இரண்டாம் பரிசாக ரூ. 2,000, மூன்றாம் பரிசாக ரூ. 1,000 வழங்கப்படும். மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 75,000, மூன்றாம் பரிசாக ரூ. 50,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும். அதேபோல மாநில அளவிலான குழுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75,000, இரண்டாம் பரிசாக தலா ரூ. 50,000, மூன்றாம் பரிசாக தலா ரூ. 25,000 வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

இப்போட்டிகள் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்பும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703481 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த திறமையான விளையாட்டு வீரர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 31-க்குள் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
PulseNews சுருக்கம்

தமிழ்நாட்டில் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது. மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெறும் இந்தப் போட்டிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, 2026-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி மாவட்ட அளவில் தொடங்கப்பட உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports