8 மாதங்களுக்குப் பிறகு திருப்பம்: புதுச்சேரி கிரிக்கெட் பயிற்சியாளர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் (CAP) அண்டர்-19 தலைமைப் பயிற்சியாளர் எஸ். வெங்கடராமன் வீரர்களைத் தாக்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு புதுச்சேரி நீதித்துறை நடுவர் மன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி புதுச்சேரி கிரிக்கெட் சங்க வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக சேடராப்பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சியாளர் வெங்கடராமன் புகார் அளித்திருந்தார் அதில், "சையத் முஷ்டாக் அலி கோப்பை (SMAT) அணியில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததற்குக் நான்தான் காரணம் என்று கூறி ஜெயசுந்தரம் கார்த்திகேயன் (32), ஏ. அரவிந்தராஜ் (30) மற்றும் எஸ். சந்தோஷ் குமரன் (28) ஆகிய மூன்று உள்ளூர் வீரர்களும் என்னைச் சேர்ந்து தாக்கினார்கள். இதில் எனக்குத் தலையில் பலத்த காயமும், தோள்பட்டையில் எலும்பு முறிவும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இவர்கள் மூவரும் ரஞ்சி டிராபி போட்டிகளில் புதுச்சேரியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்கள்” என்று தெரிவித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக அந்த மூன்று வீரர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர். சில மாதங்களுக்குப் பிறகு, சிஏபி (CAP) நிர்வாகமும் அந்த வீரர்களைக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக நீக்கியது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறான குற்றச்சாட்டை வீரர்கள் தரப்பு முன்வைக்கிறது காயமடைந்த வீரர்களில் ஒருவரான 32 வயது வீரர் கார்த்திகேயன் தரப்பில் கூறுகையில், "அன்று பயிற்சியாளர் வெங்கடராமன் தான் எங்களை அவதூறாகப் பேசி, மட்டையால் தாக்கினார். நாங்கள் அவரைத் தாக்கவில்லை. மாறாக, காயமடைந்த நாங்கள் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று பரிசோதனை செய்துகொண்டோம்" என்றனர். மேலும், "சம்பவம் நடந்த அன்றே நாங்கள் சேடராப்பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சியாளர் மீது புகார் அளித்தோம். ஆனால், போலீசார் எங்கள் புகாரைப் பொருட்படுத்தாமல், பயிற்சியாளர் கொடுத்த புகாரை மட்டுமே ஏற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்தனர். பல மாதங்களாக எங்கள் தரப்பு நியாயத்தைக் காவல்துறை கேட்கவில்லை" என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர். நீதிமன்றத்தின் தீர்ப்பு காவல் துறையிடமிருந்து சரியான நீதி கிடைக்காததால், விரக்தியடைந்த வீரர் கார்த்திகேயன் புதுச்சேரி 4-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பயிற்சியாளர் வெங்கடராமன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்படி, கடந்த வாரம் சேடராபத்து காவல் நிலையக் காவல்துறையினர் வெங்கடராமன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், பயிற்சியாளரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யக் கோரியும், இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரியும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் (BCCI) மற்றும் புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்திற்கும் (CAP) வீரர்களின் தரப்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெங்கட்ராமனிடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டபோது அவரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. பயிற்சியாளர் வெங்கடராமன் இதற்கு முன்பு சிஏபி இணைச் செயலாளராகவும் (2019-22), புதுச்சேரி பிரீமியர் லீக் (PPL) அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டிகளின் இறுதிக் கட்டத்திலும் புதுச்சேரி அணியின் பொறுப்புகளைக் கவனித்துள்ளார்.

புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் 19 வயதுக்குட்பட்டோருக்கான தலைமைப் பயிற்சியாளர் எஸ். வெங்கடராமன் மீது, கிரிக்கெட் வீரர்களைத் தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய புதுச்சேரி நீதித்துறை நடுவர் மன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி புதுச்சேரி கிரிக்கெட் சங்க வளாகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான அணியில் இடம் கிடைப்பது தொடர்பாக ஏற்பட்ட விவகாரத்தில், பயிற்சியாளர் மீது புகார் எழுந்ததை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.