கோப்புப்படம் - தமிழக சட்டப்பேரவை
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) தொடங்கிய நிலையில், இரண்டாவது நாளாக இன்று நெடுஞ்சாலைகள், விளையாட்டு மேம்பாடு, பொதுப்பணி, மனிதவள மேம்பாடு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. அந்த நாளன்றே 2026-27ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாளில் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்து, மேகதாது விவகாரம் மற்றும் காவிரி நீர் பிரச்சினை, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் விவாதங்களுக்கு பிறகான பதிலுரையை நிதி அமைச்சர் மரிய வில்சனும், வேளண்மைத் துறை அமைச்சர் வினோத்தும் வாசித்தனர்.தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று (ஆகஸ்ட் 17) மீண்டும் சட்டப்பேரவை கூடிய நிலையில், துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கோவை மாணவன் அமுதன், திருவொற்றியூர் மாணவன் தனுஷ் ஆகியோர் கொலை வழக்கு, போதைப்பொருள் புழக்கம் மற்றும் மேகமலை விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அவற்றின் மீது விவாதமும் நடைபெற்றது.மானியக் கோரிக்கை விவாதத்தின் முதல் நாளான நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய துறைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, இன்று இரண்டாவது நாளாக நெடுஞ்சாலைகள், விளையாட்டு மேம்பாடு, பொதுப்பணி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகிய துறைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், அன்றைய தினம் பொது பட்ஜெட்டும், மறுநாள் வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன.