PulseNews
விளையாட்டு

அமைச்சர் நிர்மல் குமார் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக நெடுஞ்சாலை, பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை இன்று (18.08.2026) நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இதற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், “உலகமெங்கிலும் இருக்கும் தமிழர்களுக்கு, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான ஒரே நம்பிக்கை தமிழக முதல்வர் விஜய் மட்டுமே. தமிழர்களுக்கு எந்த விதத்திலும், எங்கும் எந்தத் தீங்கு ஏற்பட்டாலும், முதல் குரலாக முதலமைச்சரின் குரல் கண்டிப்பாக இருக்கும். ஒரு சில பேருக்கு திடீர் தமிழ் பாசம், தமிழர்கள் பாசம் இருக்கும். அதெல்லாம் நம்முடைய வரலாற்றில் ஏற்கனவே பார்த்ததுதான். அதைத் தொடர்ந்து நடைபெற்ற...” எனக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “அமைச்சர் உட்காருங்கள். கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஒட்டி கூறிய வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருக்கும். கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அப்பாற்பட்டு பேசிய அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அமைச்சர் நிர்மல் குமார் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர்!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (18.08.2026) நெடுஞ்சாலை, பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மைத் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானம் அவையில் கொண்டு வரப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துப் பேசினார். அந்த உரையின் போது அவர் குறிப்பிட்ட சில கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports