மகுவா மொய்த்ராவுக்கு பிடி வாரண்ட்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்ட நீதிமன்றம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ராவிற்கு பிடி வார்ண்ட் பிறப்பித்துள்ளது. இவர், துளசிமணி மாலை மற்றும் இந்து மத நம்பிக்கைகள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் மத உணர்வுகளைப் பயன்படுத்தியதாக மேற்கு வங்கத்தின் கூர்னி பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பஜகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இவர் இந்திய ஆயுதப்படை மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு மகுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் தொடர்ந்து நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், அவர் நீதிமன்ற உத்தரவுகளை அவமதிப்பதாகக் கூறி இந்த பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு வெளியே அவருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. அதனால், “நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என அவரது வழக்கறிஞர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்ட நீதிமன்றம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா மீது பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்து மத நம்பிக்கைகள் மற்றும் துளசிமணி மாலை குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி, பாஜகவினர் மற்றும் கூர்னி பகுதி பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக, இந்திய ஆயுதப்படை மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும் மகுவா மொய்த்ரா கருத்துக்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.